ஹஜ் பயணத்திற்கு மானியத்தை உயர்த்தியதற்கு நன்றி : முதல்வருடன் கோட்டக்குப்பம் ஜமாத்தார்கள் சந்திப்பு
தமிழ் நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனி சாமியை அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளரும், கழக ஆட்சி மன்றக் குழு உறுப்பினரும், தமிழ் நாடு வக்ஃபு வாரிய முன்னாள் தலைவருமான அ. தமிழ்மகன் உசேன், விழுப்புரம் வடக்கு மாவட்டம், கோட்டக்குப்பம் ஜமாத் நிர்வாகிகளான ஜமாத் தலைவர் அப்துல் அமீது, முத்தவல்லி பக்ருதீன் பாரூக், துணைச் செயலாளர் கே. நசீர், ஜமாத்தார் முகம்மது சேட், டி. அமீன், எம்.ஜி.ஆர். இஸ்மாயில், லியாகத் அலி, கமால்பாய் உள்ளிட்டோர் நேரில் சந்தித்தனர்.
தமிழகத்திலிருந்து ஹஜ் பயணம் செய்யும் பயனாளிகளுக்கு இந்த ஆண்டு முதல் அம்மாவின் தமிழக அரசு 6 கோடி ரூபாய் மானியத் தொகையாக வழங்க உத்தரவிட்டமைக்காக, பொன்னாடை போர்த்தி பூச்செண்டு வழங்கி கோட்டக்குப்பம் ஜமாத்தார்கள் சார்பாக தங்களது நன்றியைத் தெரிவித்தனர்.
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.