கோட்டக்குப்பத்தில் ஆட்டோ டிரைவர் வீட்டை உடைத்து மர்ம நபர்கள் 7 பவுன் நகையை திருடி சென்றுள்ளனர்.புதுச்சேரியை அடுத்த கோட்டக்குப்பம் மரைக்காயர் தோப்பு பகுதியை சேர்ந்தவர் அப்துல் பரூக். இவரது மகன் ஜாபர் அலி, 25; ஆட்டோ டிரைவர். இவர், நேற்றுமுன்தினம், வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தார். நேற்று அவர்கள் வீடு திரும்பிய போது, முன்பக்க கதவு திறந்து கிடந்தது. அதிர்ச்சியடைந்த ஜாபர் அலி உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள், அனைத்தும் சிதறி கிடந்தது. பீரோவில் இருந்து 7 பவுன் நகை திருடப்பட்டிருந்தது.இது குறித்து கோட்டக்குப்பம் சப்-இன்ஸ்பெக்டர் அருள்செல்வன் தலைமையிலான போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.