கோட்டக்குப்பம் குவைத் ஜமாஅத் நிதி நல்கையில் அஞ்சுமனில் நடைபெற்ற செல்பேசி தொழில்நுட்ப பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு நிறைவு செய்த 35 மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று (24.6.18) மாலை நடைபெற்றது.. அஞ்சுமன் செயலாளர் ஜனாப். லியாகத் அலி @ கலீமுல்லாஹ் அவர்கள் நிகழ்ச்சிக்கு வாழ்த்துரை வழங்கினார். நிகழ்வில் குவைத் ஜமாஅத் பொறுப்பாளரும் ஜெய்னுதீன் யாசீன், பயிற்சி வழங்கிய மையத்தின் இயக்குனர் சக்திவேல், ஜமாஅத்தின் உள்ளூர் நிர்வாகிகள் ஜமாஅத் உறுப்பினர்கள் என திரளாக கலந்து சிறப்பித்தனர்.
பெரும் சிரமத்திற்கு மத்தியில் எதிர்கால நன்மையைக் கருதி கடந்த 3 ஆண்டுகளாக புனரமைக்கப்பட்டு மேம்படுத்தப்படும் அஞ்சுமன் உள்கட்டமைப்பு வசதிகள் உரிய பலனைத் தரத் துவங்கியிருப்பதில் பெரும் மகிழ்ச்சி.. அறிவு தேட்டத்திற்கும் ஆற்றல் படுவதற்கும் அஞ்சுமனை அதிகமதிகமாக மாணவர்களும் இளைஞர்களும் பயன்படுத்திக் கொள்ள முன்வரும் போதுதான் அவர்களுடைய தேவைகளைக் கண்டறிந்து அதற்கேற்ற முயற்சிகளை மேற்கொள்வது சாத்தியமாகும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.