கோட்டக்குப்பம் பேரூராட்சியில் இது வரை பயணிகள் ஒதுங்க ஒரு நிழல் குடை கூட இல்லை. இதனால் பயணியர், வெயில், மழை என, இயற்கை இடர்பாடுகளால் பாதிக்கப்பட்டு வந்தனர் . தற்போதே கடும் வெயில் சுட்டெரிக்கும் நிலையில், பெண்கள், குழந்தைகள், முதியோர், வெயிலில் களைப்படைந்து, ஒதுங்கி இளைப்பாற, நிழல் இன்றி பரிதவிக்கின்றனர் . அதுபோல, மழை பெய்யும் போதும், ஒதுங்க இயலாமல் இருந்தனர் .
இதுகுறித்து கோட்டகுப்பதில் பல அமைப்புகள் இருந்தும் தகுந்த ஏற்பாடுகளை செய்யாமல் இருந்த நேரத்தில், KMIS என்ற அமைப்பினர் , பயணிகளின் நலன் கருதி கோட்டக்குப்பம் பேருந்து நிறுத்தம் முழுவதும் தற்காலிக நிழல் குடை அமைத்துள்ளனர்.
அதை கோட்டக்குப்பம் காவல் துறை துணை ஆய்வாளர் திரு. அருள் செல்வன் அவர்கள் பார்வையிட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அற்பணித்தார் .
நமதூருக்கு நிழல் குடை வேண்டி 4 வருடங்களுக்கு முன்பு பதிந்த செய்தி அப்படியே தான் உள்ளது.
செய்தியை பார்க்க இதை அழுத்தவும்