தமிழக-புதுச்சேரி எல்லையில் அமைந்துள்ள, செம்மண் ஓடை பாலத்தை இடித்துவிட்டு, புதிய பாலம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வானுார் ஒன்றியம், திருச்சிற்றம்பலம் பஞ்சாயத்திற்குட்பட்ட பட்டானுார் கிராமம், புதுச்சேரி மாநிலத்தையொட்டி அமைந்துள்ளது.
இங்குள்ள நர்மதா நகரில், மொரட்டாண்டி செம்மண் ஓடை உள்ளது. இதன் மீது புதுச்சேரிக்கு செல்வதற்கு வசதியாக சிறிய பாலம் அமைக்கப்பட்டது.
இந்த பாலம் மூலமாக நர்மதா நகர், கலைவாணர் நகர், ஸ்ரீராம் நகர், வசந்தபுரம் உள்ளிட்ட தமிழக பகுதி மக்களும், லாஸ்பேட்டை குமரன் நகர் பகுதி மக்களும் பயனடைந்து வருகின்றனர்.
இப்பகுதி மக்கள், ஜிப்மர் மருத்துவமனைக்கு செல்ல இந்த பாலம் பெரும் உதவியாக இருந்து வருகிறது. இந்த பாலம் தற்போது பலவீனமாக காட்சியளிக்கிறது.
பாலத்தின் ஒரு பக்க தடுப்பு சுவர் சேதமடைந்து சரிந்துள்ளது. பாலத்தின் அடிப்பகுதியில் சிமெண்ட் காரை மட்டுமே ஒட்டிக்கொண்டுள்ளது.
எந்நேரத்திலும் இடிந்து விழும் அபாயத்தில் உள்ள இந்த பாலத்தின் வழியே தினமும் நுாற்றுக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன.
மேலும், மின் விளக்கு வசதி இல்லாததால், வாகன ஓட்டிகள் பாலத்தில் இருந்து தடுமாறி விழுந்து, விபத்தில் சிக்கி வருகின்றனர்.
எனவே, புதுச்சேரி பகுதியையும், தமிழக பகுதியையும் இணைக்கும் பிரதான சாலையில் ஆபத்தான நிலையில் உள்ள பாலத்தை இடித்து அகற்றவிட்டு, புதிய பாலம் கட்டுவதற்கு, விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.