கோட்டக்குப்பம் குவைத் ஜமாஅத் நிதி நல்கையில் அஞ்சுமனில் நடைபெறவுள்ள செல்பேசி தொழில்நுட்ப பயிற்சி வகுப்பிற்கான தொடக்க நிகழ்வும் சேர்க்கை முகாமும் நேற்று காலை 9.30 மணியளவில் அஞ்சுமன் வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.. கூட்டத்திற்கு ஜாமிஆ மஸ்ஜித் முத்தவல்லி Moulana Fahrudeen Faruk தலைமை தாங்கினார்.. தொடக்கவுரை ஆற்றிய அஞ்சுமன் நூலக செயலாளர் மௌலவி முஹம்மது பாதுஷா, கூட்டு முயற்சிகளால் விளையக் கூடிய நன்மைகள் குறித்தும், சமுதாய ஆற்றல்கள் ஒருங்கிணைக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் செறிவாகப் பேசினார்..
அஞ்சுமன் செயலாளர் திட்ட வரைவு மற்றும் நன்மைகள் குறித்துப் பட்டியலிட்டு, சமூக முன்னேற்றம் குறித்து பல்வேறு நிலைகளில் சிந்தித்து செயலாற்றும் கோட்டக்குப்பம் குவைத் ஜமாஅத் தற்போது பலன்தரும் முதலீடுகளில் கவனம் செலுத்தத் தொடங்கியது குறித்து அஞ்சுமனின் பாராட்டுக்களையும் ஒத்துழைப்பையும் தெரிவித்தார். மேலும் அஞ்சுமன் கட்டமைப்பு வசதிகளை வருங்கால தலைமுறை நன்மை கருதிய திட்டங்களுக்கு பயன்படுத்த ஆவல் கொண்டுள்ள அனைத்து சமுதாய இயக்கங்கள், களப்பணியாளர் அனைவருக்கும் பொது அழைப்பு விடுத்தார்.
நிகழ்வின் இறுதியில் அஞ்சுமன் தலைவர் டாக்டர் எல்.எம். ஷரிஃப், பேரூராட்சி மன்ற மேனாள் தலைவர் இ. அப்துல் ஹமீது ஆகியோர் பதிவு செய்ய வந்தவருக்கு படிவங்களை வழங்கினார். முகாம் நிறைவடைந்த 2 மணிவரை சுமார் 60க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வரப்பெற்றன. நாளை 10.4.18 மாலை 3.00 மணிவரை விண்ணப்பங்கள் பெறப்படும்.. பெறப்பட்ட விண்ணப்பங்களில் இருந்து 50 நபர்கள் தேர்வு செய்யப்பட்டு ரூபாய் ஒரு லட்சம் செலவில் 60 நாள் பயிற்சி வழங்கப்பட உள்ளது..
பயனுள்ள திட்டத்தை அஞ்சுமனில் செயல் படுத்த முடிவெடுத்து, சிறப்பாக ஆரம்பிக்க ஆவண செய்த ஜமாஅத்தின் தலைவர் Habibur Rahaman, செயலர் Rahamathulla Rahamath, Ghazali Rahamathulla ஆகியோருக்கும் உடனிருந்து உறுதுணையாக கடமையாற்றிய ஜமாஅத்தின் உள்ளூர் நிர்வாகிகள் இருந்த Sadiq Basha, Abdul Malik, Smj Ameen ஆகியோருக்கும் அஞ்சுமனின் நெஞ்சம் நிறைந்த நன்றி..