கோட்டக்குப்பம் ஜாமி ஆ மஸ்ஜித் 150 வது ஆண்டு நிறைவை கொண்டாடும் பாரம்பரிய முப்பெரும் விழா இனிதே நிறைவுபெற்றது.
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்……. )
கோட்டக்குப்பம் ஜாமி ஆ மஸ்ஜித் 150 வது ஆண்டு நிறைவை கொண்டாடும் பாரம்பரிய முப்பெரும் விழா இனிதே நிறைவுபெற்றது. மாஷா அல்லாஹ்…..
கடந்த சனிக்கிழமை 06/01/2018 ஆரம்பமான இந்நிகழ்வு கடந்த இரண்டு தினங்களாக ஜாமி ஆ மஸ்ஜித் வளாகத்தில் கோலாகலமாக நடைபெற்றது. முதல் நாள் வணிக வளாகம் திறப்பு விழா தொடங்கி கடைசி நாளில் நடைபெற்ற சொல்லும் சொல்லரங்கம் வரை நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற உதவிய அணைத்து நல்லுங்களுக்கும் நன்றி.
குறிப்பாக விழா குழு தலைவர் ஹாஜி E. அப்துல் ஹமீத் அவர்களின் பங்களிப்பு அளப்பரியது. ஜமாஅத் முத்தவல்லி மௌலானா மௌலவி A. பக்ருதீன் பாரூக் ஜமாலி மற்றும் நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றி.
நிகழ்ச்சி சிறப்புற நடைபெற பணம் மற்றும் பொருளுதவி செய்த அனைவருக்கும் நன்றி.
கலந்து கொண்ட ஊரின் உள்ள பெரும்பாலும் அரசியல் கட்சியினரும் மற்றும் இயக்கத்தார்களுக்கு நன்றி.
வரவேற்பு குழுவின் மூலம் நிகழ்ச்சிக்கு வந்திருந்த முக்கிய பிரமுகர்களை வரவேற்று உபசரித்து தங்கவைத்து அவர்களை நிகழ்ச்சிக்கு அழைத்து வந்து திரும்ப நல்லபடியா வழி அனுப்பியது வரை பங்களிப்பு செய்த குழு உறுப்பினர்களுக்கு நன்றி.
மலர் குழுவில் தலைவர் தலைமையில் பணியாற்றிய உறுப்பினர்கள் மலருக்கான விளம்பரம் சேகரிப்பதில் தொடங்கி வாழ்த்துரை வாங்குவது வரை செயலாற்றிய அனைவருக்கும் நன்றி.
குறிப்பாக கோட்டகுப்பத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தி எளிய நடையில் எழுதிய மலர் ஆசிரியர் ஜனாப் A. லியாகத் அலி @ கலீமுல்லாவை அவர்களை பெரிதும் பாராட்டி நன்றி தெரிவிக்கிறோம்.
மேலும் கோட்டக்குப்பம் பாரம்பரியத்தை விளக்கும் வகையில் கண்காட்சி அமைத்து, ஊரின் பழைய புகைப்படங்கள் மற்றும் பழைய பொருட்களை காட்சி படுத்திய கண்காட்சி குழுவினர்களுக்கு நன்றி.
தீனியாத் மதரசா மாணவர்களின் அணிவகுப்பை ஏற்பாடு செய்து கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி
கோட்டகுப்பதின் இளைஞர்கள் மாணவர்கள் இந்த விழாவில் ஆர்வமாக பங்கெடுத்து பல பணிகளில் தங்களை தாங்களே இணைத்து கொண்டனர், குறிப்பாக வாகன ஒழுங்கு மற்றும் பார்க்கிங் நண்பர்கள் குழு, உணவு பார்சலை மக்களுக்கு அவர்கள் இருக்கும் இடங்களுக்கு சென்று வழங்கிய நண்பர்கள் குழு, மேடை மற்றும் பந்தல் நாற்காலிகளை ஒழுங்கு படுத்திய நண்பர்கள் குழு ஆகியோர்களுக்கு நன்றி.
வந்திருந்த அணைத்து மக்களுக்கும் உணவு மற்றும் தேநீர், ஜூஸ் தயாரித்து வழங்க உறுதுணையா இருந்த உணவு தயாரிப்பு குழுவினர்களுக்கு நன்றி. குறிப்பாக கறி, காய்கறி உணவு பொருட்களுக்கு தயார் படுத்தியவர்களுக்கும், உணவை சுவையாக சமைத்த சமையல் கலைஞர்களுக்கும், அதை சுகாதாரமாக பேக் பண்ணிய அனைவருக்கும் நன்றி.
மக்களுக்கு தேவை படும் நேரத்தில் தண்ணீர் கொடுத்து உதவிய நண்பருக்கும் மற்றும் பரோட்டா, பிஸ்கட், இனிப்பு பொருட்கள் வழங்கியவர்களுக்கு நன்றி.
விழா நடைபெற மேடை மற்றும் பந்தலை அழகாக ஏற்பாடு செய்து கொடுத்த தப்லிக் ஜாமத்தினர்களுக்கு நன்றி.
ஆம்புலன்ஸ் எடுத்து வந்து தயார் நிலையில் வைத்து இருந்த த. மு. மு. க. வினர்களுக்கு நன்றி
விழா நடைபெற பாதுகாப்பு கொடுத்த காவல் துறையினருக்கு நன்றி.
நிகழ்ச்சி வீடியோ மற்றும் ஓலி ஒளி அமைப்பு செய்தவர்களுக்கும் நன்றி.
விழா நடைபெறும் இடத்தை சுத்தமாக வைத்திருக்க உதவிய பேரூராட்சி ஊழியர்களுக்கும் நிர்வாகிகளும் நன்றி.
கோட்டக்குப்பம் வரலாற்றில் இல்லாத வகையில் பெருந்திரளாக தாய்குலங்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கெடுத்தார்கள். குறிப்பாக இளைய தலைமுறை பெண்கள் பள்ளிவாசலில் தொழுகை நடத்தி, பள்ளிவாசல் முழுவது ஆர்வமாக சுற்றி பார்த்து புகைப்படம் எடுத்து கொண்டனர்.
மேலும் வெளிநாட்டில் வசிக்கும். நமதூர் சகோதரர்கள் இந்த மாபெரும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பில்லாமல் இருந்த நேரத்தில், கோட்டக்குப்பம் இளைஞர் மாணவர் மன்றம் அனுசரணையில் நமது இணையத்தளம் வழங்கிய நேரலை நிகழ்ச்சியை தங்கள் இல்லம் மற்றும் அறைகளில் இருந்தவாறு பார்த்து மகிழ்ந்தனர். நேரலைக்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றி.
நிகழ்ச்சிக்கு வந்திருந்து மக்களுக்கு நல்ல செய்திகளை சொன்ன மார்க்க அறிஞர்கள் மற்றும் தலைவர்களுக்கு கோட்டக்குப்பம் மக்களின் சார்பாக நன்றி தெரிவித்து கொள்கிறோம்.
இன்ஷா அல்லாஹ் மீண்டும் நாம் அனைவரும் இதே போல் ஒரு நிகழ்வை ஒற்றுமையாக இருந்து நடத்த எல்லாம் வல்ல இறைவன் துணை செய்யணும் . ஆமீன்
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.