இன்ஷா அல்லாஹ் வருகின்ற 07/01/2018 ஞாயிறு காலை 9 மணி முதல் கோட்டக்குப்பம் ஜாமி ஆ மஸ்ஜிதின் 150 வது வருட நிறைவு விழா -ஊரின் பாரம்பரிய முப்பெரும் விழாவாக பள்ளி வாசல் திடலில் மிகச்சிறப்பான முறையில் நடைபெற இருப்பதை நாம் அனைவரும் அறிந்ததே.
மாபெரும் இவ்விழாவில்
தமிழக சட்டம் நீதி மற்றும் சிறைத்துறை அமைச்சர் மாண்புமிகு C .Ve. சண்முகம்
புதுச்சேரி முதலமைச்சர் மாண்புமிகு V. நாராயணசாமி
வானுர் சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு M.சக்ரபாணி
கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு K. A. M. முஹம்மது அபூபக்கர்
ஹாஜி S M இதயத்துல்லாஹ்
ஜனாப் காயல் மகபூப்
மௌலானா ஹாபிஸ் P. A. காஜா முயினுத்தீன்
பேராசிரியர் தி. மு. அப்துல் காதர்
பேராசிரியர் மு. சாயுபு மரைக்காயர்
மற்றும் பல அறிஞர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
இந்நிகழ்வில் கலந்து கொள்ள இயலாத உள்நாட்டு மற்றும் வெளிநாடு வாழ் கோட்டக்குப்பம் மக்களின் தாகத்தை தீர்க்கும் வண்னம் நமது ஜமாஅத் நிர்வாகத்தின் ஆதரவோடு இணையத்தில் நேரடி ஒளிப்பரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துகொள்கிறோம்.
எனவே வெளிநாடு வாழ் கோட்டக்குப்பம் மக்கள் இதே தளத்தில் விழாவை நேரடியாக கண்டுகளிக்கலாம்.
Like this:
Like Loading...