நூற்று ஐம்பது ஆண்டுகால வரலாற்றின் நேரடி சாட்சியாக இருந்து கொண்டிருக்கும் இந்த படங்கள் மூலம் கோட்டகுப்பத்தின் கடந்த கால வரலாற்றை திரும்பிப் பார்க்கவே இந்தப் பயணம்.
பழைய புகைப்படங்கள், அபூர்வமான நிகழ்ச்சிகளின் புகைப்படங்கள், என எல்லாமே ஒரு வகையில் பொக்கிஷம்தான். கடந்த காலத்தின் அரசியல், வரலாறு, போன்றவற்றை உண்மையின் சான்றாக படம் பிடித்து நம் கண் முன்னே நிறுத்துகிறது இந்த பயணம்.
கோட்டக்குப்பம் பழைய பள்ளிவாசல் குளம் இருந்த நிலையும், இப்போது இருக்கும் நிலையும் அறியும்போது வடுக்களை கிளறி, புதிய வலியை கொடுக்கிறது.
இதில் இருக்கும் பழைய மதரசா மாணவிகள் புகைப்படங்களை பார்க்கும் போது நமது மூளை அந்த இளமைக் காலத்திற்கு நம்மை அழைத்துச் செல்கிறது. இளமையில் நாம் மக்கள் இப்படி இருந்தார்கள் . இன்றைக்கு எப்படி முகம், உடல் மாறிவிட்டது என்பதை ஒப்பிட்டுப் பார்க்க முடிகிறது .
நமது தாத்தா, முன்னோர்களின் புகைப்படங்கள் மூலம் அவர்கள் எப்படி இருந்தார்கள், எப்படி வாழ்ந்தார்கள் என்பதையும் தெளிவாக தெரிந்துகொள்ள முடிகிறது.
நமதூர் மக்களின் வாழ்க்கையோடு ஒன்றி வாழ்த்த தலைவர்களை இந்த புகைப்படம் நம் கண்முன் கொண்டுவந்து காட்டுகிறது…