பல லட்சம் செலவில் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு வராமல் பூட்டிக்கிடக்கும் கழிவறை
கோட்டக்குப்பம் பேரூராட்சிக்கு உட்பட்ட சின்ன கோட்டக்குப்பம் சமரசம் நகர் பகுதியில் சுமார் 700க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு கழிவறை கட்ட வேண்டும் என பல ஆண்டுகளாக அரசுக்கு மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதன் பயனாக கடந்த 2012-13ம் ஆண்டில் நபார்டு நிதியுதவியுடன் அப்பகுதியில் ரூ.12 லட்சம் மதிப்பில் ஒருங்கிணைந்த பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான கழிவறை கட்டப்பட்டது. பணிகள் அனைத்தும் முடிந்த நிலையில் அந்த கழிவறை வளாகம் இன்னும் பயன்பாட்டுக்காக திறந்துவிடப்படவில்லை. இதனால் இப்பகுதியில் உள்ள பெண்களும், குழந்தைகளும் இயற்கை உபாதைகளை கழிக்க அவதி அடைந்து வருகின்றனர்.
பல லட்சம் செலவில் கட்டப்பட்ட அந்த கழிவறை வளாகத்தில் சமூக விரோதிகள் மது அருந்துதல், சூதாட்டம் உள்ளிட்ட குற்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இதுகுறித்து மக்கள் புகார் அளித்ததால் தற்போது கழிவறை வளாகத்தை பேரூராட்சி நிர்வாகம் சுத்தம் செய்து, பூட்டு போட்டு பூட்டியுள்ளது. இருந்தும், இதுவரை அதை பயன்பாட்டுக்கு திறந்துவிடவில்லை. எனவே கழிவறை வளாகத்தை பெண்கள், குழந்தைகளின் பயன்பாட்டுக்காக திறந்து விட கோட்டக்குப்பம் பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.