கோட்டக்குப்பம் பேரூராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைக்கு செப்டம்பர் மாதத்தில் இருந்து வரி வசூலிக்கும் அறிவிப்பிற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.கோட்டக்குப்பம் பேரூராட்சிக்குட்பட்ட அணைத்து வார்டு பகுதிகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைக்கு குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள், கடைகள், ஹோட்டல்கள் என மாதம் ஒரு தொகை வசூலிக்கப்படும் என அறிவித்துள்ளனர்.
இந்த மாதத்தில் இருந்து நடைமுறைப்படுத்தப்பட இந்த திடீர் அறிவிப்பிற்கு பலதரப்பட்ட மக்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இப்பகுதியை சேர்ந்த பெயர்குறிப்பிட விரும்பாத நபர் கூறியதாவது:
கடையில் கழிவாகும் அட்டை, பாலிதீன் கவர்களை தினமும் சேகரித்து எடைக்கு போட்டுவிடுவோம்.பேரூராட்சிக்கு குப்பை என இதுவரை கொடுத்ததும் இல்லை, யாரும் வாங்க வந்ததும் இல்லை. மழையின்றி, விவசாயம் இல்லாமல் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ள இக்காலகட்டத்தில் புதிதாக அறிவிக்கப்பட்ட குப்பை வரி வணிகர்களை மேலும் வதைப்பதாகும். பொது இடத்தில் கொட்டும் குப்பைக்கு வரி செலுத்த வேண்டிய கட்டாய நிலை உருவாகியுள்ளது. இது பெரியஅளவில் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, இத்திட்டத்தை உடனடியாக ரத்து செய்யக்கோரி, வணிகர் சங்கம் சார்பாக கலெக்டரிடம் புகார் தெரிவிக்க வேண்டும் என்றார்.
குப்பைக்கு கட்டணம் விதிக்கும் முறை என்பது மக்கள் மீது கூடுதல் சுமையை ஏற்றுவதாகும். பேரூராட்சி வரி வசூலிப்பில் பெரும் குளறுபடி உள்ளது. அடிப்படை வசதிகள் செய்யப்படாமலேயே வரிகள் வசூலிக்கின்றனர். குப்பைத் தொட்டிகளாக மாறியுள்ள கால்வாய்களை முதலில் சரி செய்ய வேண்டும். அணைத்து தெருக்களில் குப்பை தொட்டி வைத்து முறையாக குப்பை எடுக்க வேண்டும்.
பொது இடங்களில் இறைச்சி கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க வேண்டும். நடைமுறையில் இல்லாத திட்டங்களுக்குக்கூட வரி செலுத்தும் நிலை உள்ளது. சேகரிக்கப்படும் குப்பை அனைத்தும் முறையாக தரம்பிரிக்கப்படுவதில்லை. மாறாக எரிக்கப்படுகின்றன. பணம் வசூலிப்பதிலேயே பேரூராட்சி குறியாக உள்ளது. குப்பைக்கு கட்டணம் விதிக்கும் முறையை ரத்து செய்ய வேண்டும்.
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.