கோட்டகுப்பதில் நடைபெற்ற ஈகை திருநாள் தொழுகை புகைப்படங்கள்
இந்தாண்டு ஈகை திருநாள் தொழுகை மழையின் காரணமாக வழக்கமாக நடைபெறும் ஈத்கா மைதானத்தில் நடைபெறவில்லை. மாற்று ஏற்பாடாக ஈகை திருநாள் தொழுகை கோட்டகுப்பதில் இருக்கும் அணைத்து ஜும்மா தொழுகை நடைபெறும் பள்ளிவாசலில் நடைபெரும் என்று ஜாமி ஆ மஸ்ஜித் நிர்வாக சபை முடிவெடுத்து அறிவித்தனர்.
அதனடிப்படையில் கோட்டகுப்பம் பெரிய பள்ளிவாசலில் நடைபெற்ற ஈகை திருநாள் தொழுகையை ஜாமி ஆ மஸ்ஜித் இமாம் மௌலவி முஹம்மத் யாசின் தொழ வைத்தார்காள் . மேலும் பெருநாள் பேருரையை மௌலவி அப்துல் ஹக் ஹஜ்ரத் நிகழ்த்தினார்கள். முடிவில் கோட்டகுப்பம் டவுன் காஜி ஹாஜி மௌலவி தமீமுல் அன்சாரி அவர்கள் துவாவுடன் முடிவுற்றது.
முன்னதாக ஜாமி ஆ மஸ்ஜித் முத்தவல்லி மௌலவி ஹாஜி. பக்ருதீன் பாரூக் அவர்கள் நிர்வாகத்தின் சார்பாக பெருநாள் வாழ்த்து கூறினார்கள்.
தொழுகை முடிந்தவுடன் பொதுமக்கள் அனைவரும் தங்களுக்குள் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.
EID MUBARAK
LikeLike