நமது நாட்டின் 71 வது சுதந்திர விழா கோட்டக்குப்பம் அஞ்சுமன் நுஸ்ரத்துல் இஸ்லாம் நூலகம் சார்பாக ஜாமி ஆ மஸ்ஜித் ஷாதி மஹாலில் நடைபெற்றது.
அஞ்சுமான் செயலாளர் ஜனாப் அ. கலீமுல்லாஹ் அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து உரை நிகழ்த்தினார்.
விழாவை அஞ்சுமன் துணை செயலாளர் மௌலவி மு. முஹம்மத் பாதுஷா சஹாரன்பூரி அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்கள்.
அஞ்சுமன் பொருளாளர் ஹாஜி. அ. அப்துல் முத்தலீப் மற்றும் ஜாமி ஆ மஸ்ஜித் முத்தவல்லி மௌலானா மௌலவி அ. பக்ரூதீன் பாரூக் நிகழ்ச்சியில் முன்னிலை வகித்தனர்.
விழா தலைமை ஏற்ற புதுவை கலை கல்லூரி தமிழ் துறை தலைவர் பேரா முனைவர் நா. இளங்கோ – புதிய இந்தியா குறித்து அவருக்கே உரித்தான நகைச்சுவையுடன் தலைமையுரை நிகழ்த்தினார்.
புதுவை பல்கலைக்கழகம் பேராசிரியார் முனைவர் பா. ரவிக்குமார், கவிக்கோவின் சுதந்திர சிந்தனைகள் என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்.
சென்னை காயிதே மில்லத் கல்லூரி தமிழ் துறை தலைவரும், அணைத்து சமூக மக்களும் போற்றும் உன்னத தலைவர் பேராசிரியார் முனைவர் ஜெ ஹாஜா கனி அவர்கள் செந்நீர் விட்டே வளர்ந்தோம் என்ற தலைப்பில் நிறைவு சொற்பொழிவு நிகழ்த்தினார். இந்தியா சுதந்திர பெறுவதற்கு முஸ்லிம்களின் தியாகத்தை நினைவு கூர்ந்தார். மேலும் சுதந்திர இந்தியாவில் முஸ்லிம்களின் இன்றைய நிலை குறித்து தனது ஆழமான சிந்தனைகள், அதனை எதிர்கொள்ளும் ஆற்றலை இளைஞர்கள் வளர்த்து கொள்ளவேண்டிய அவசியத்தை எடுத்துரைத்தார். முஸ்லிம்களின் நீண்ட வரலாற்றை தனது சிறப்பான பேச்சில் மக்களின் மனதில் பதியவைத்தார்.
அஞ்சுமன் உறுப்பினர் முபாரக் அவர்கள் நன்றியுரையுடன் நிகழ்ச்சி இனிதே முடிவுற்றது.
நிகழ்ச்சி முடிந்த பிறகு பேராசிரியார் முனைவர் ஜெ. ஹாஜா கனி அவர்கள் அஞ்சுமன் நுஸ்ரத்துல் இஸ்லாம் நூலகத்துக்கு நேரடியாக வருகை தந்து பார்வையாளர் கையேட்டில் தங்களது கருத்தை பதிந்தார்கள்.