கோட்டக்குப்பம் அஞ்சுமன் நுஸ்ரத்துல் இஸ்லாம் சார்பாக நடைபெற்ற 71 வது சுதந்திர தின விழாவில் அஞ்சுமன் பொருளாளர் ஹாஜி அப்துல் முத்தலீப் அவர்கள் கொடியேற்றி வைத்தார்கள். அதை தொடர்ந்து ஜாமி அத்துர் ரப்பானியா அரபி கல்லூரியில் அதன் பொறுப்பாளர் ஹாஜி அப்துல் குத்தூஸ் அவர்கள் கொடியேற்றி வைத்தார்கள். இந்த நிகழ்வில் பெருந்திரளாக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாகமாக கலந்து கொண்டனர்.