அஞ்சுமன் சார்பில் சமூகவலைத்தளத்தை எப்படி பயனுள்ள வகையில் பயன்படுத்தலாம் என்ற கலந்துரையாடல் அஞ்சுமன் வளாகத்தில் நடைபெற்றது. ஆர்வமாக கலந்துகொண்ட சமூக பயனாளர்கள் இந்த தளத்தில் தாங்களுக்கு கிடைத்த அனுபவத்தை பகிர்ந்துகொண்டார்கள்.
முன்னதாக அஞ்சுமன் செயலாளர் தோழர். கலிமுல்லாஹ் அவர்கள் அஞ்சுமன் வரலாறு மற்றும் செயல்பாடுகளை விவரித்தார்.
கலந்துரைடயலில் முடிவில் ஊரின் இளைஞர்களை உள்ளடக்கிய குழு ஒன்று அனைத்து சமூகவலைதளத்தில் உருவாக்கமுடிவெடுக்கப்பட்டது.
மேலும் வருங்காலத்தில் அரசு வேலைவாய்ப்பு தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்த திட்டம் வகுக்கப்பட்டது.
மாணவர் நலன் சார்ந்து கூட்டப்பட்ட இந்த நிகழ்வில் பெரும்திரளாக மாணவர்கள் கலந்து கொள்ளாதது வருத்தமான விஷயம்.