கோட்டக்குப்பம் ஈத்கா மைதானத்தில் இன்று காலை நோன்பு பெருநாள் தொழுகை நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் கலந்துக் கொண்டனர். கோட்டக்குப்பம் அருகில் உள்ள அனைத்து மஸ்ஜிதுகளிலிருந்தும் கோட்டக்குப்பம் ஈத்காவை நோக்கி தக்பீர் முழங்கி ஊர்வலமாக வந்தனர்.
புத்தாடை அணிந்து பெரியவர்களும்,இளைஞர்களும்,சிறுவர்களும் ஆர்வபெருக்குடன் கலந்துக் கொண்டனர். தொழுகைக்குப் பின்னர் உலக அமைதிக்காகவும்,அனைவரின் நல்வாழ்வுக்காகவும்,நலனுக்காகவும், சமுதாய ஒற்றுமைக்காகவும் பிரார்த்தனை செய்தனர். மேலும் ஊரின் செழிப்பான,சிறப்பான முனேற்றத்திற்க்காகவும் துஆச் செய்யப்பட்டது. பிரார்த்தனைக்குப் பின்னர் ஒருவரை ஒருவர் சந்தித்து கரம் கொடுத்து ஆரத் தழுவி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.