அஞ்சுமன் சார்பாக மாணவர் மெகா இஃப்தார் நிகழ்ச்சி இன்று 17/06/2017 கோட்டக்குப்பம் ஷாதி மஹாலில் மறைந்த காஜி உபைதுர் ரஹ்மான் நினைவரங்கில் நடைபெற்றது. அஞ்சுமன் செயலாளர் கலீமுல்லாஹ் அனைவரையும் வரவேற்று நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
ஒரு முஸ்லிமின் பரந்து விரிந்த நோக்கையும் செயல்பாட்டையும் பேராசிரியர் மௌலவி முஹம்மது புஹாரி சிறப்பாக எடுத்துரைக்க, பேராசிரியர் நா.இளங்கோ, பொதுதளத்தில் ஒரு சிறந்த மாணவனின் ஆரோக்கிய நகர்வையும் அரசியல் பார்வையையும் மாணவர்களுக்கு மத்தியில் கலந்துரையாடல் பாணியில் எடுத்துரைத்தார்.. மாணவர்களின் விருப்பிற்கேற்ப நிகழ்வை பேராசிரியர் அமைத்தது கூடுதல் சிறப்பு..
அஞ்சுமன் மாணவர் சிந்தனைச் சுற்றத்திற்கு பொறுப்பேற்று சரியான நோக்கில் செலுத்தி, இந்நிகழ்ச்சியை திறம்பட நடத்தி முடித்த துணைக்குழு உறுப்பினர்கள், மாணவர் சிந்தனைச் சுற்ற இளவல்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி…