கோட்டகுப்பம் Five ஸ்டார் நற்பணி இயக்கத்தினரின் ஆதரவோடு கும்பகோணம் ஹலிமா டிரஸ்ட் வருடாவருடம் கோட்டகுப்பம் மற்றும் அதனை சுற்றி உள்ள ஊர்களின் உள்ள ஏழை மக்களுக்கு ஜக்காத் பொருட்களாக குடும்ப உறுப்பினர் அனைவருக்கும் தேவையான துணி மணிகள் வழங்கி வருகிறார்கள். இந்த வருடமும் (2017) வழக்கம் போல் நேற்று (28/05/2017) நடைபெற்ற நிகழ்ச்சியில் சுமார் 382 குடும்பங்களுக்கு ஜக்காத் பொருட்கள் ஏழை மக்களுக்கு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சி சிறப்புற நடைபெற பெரிதும் உதவிய Five ஸ்டார் நற்பணி மன்றத்தினர், கிஸ்வா சமூக அமைப்பினர் மற்றும் கோட்டகுப்பம் தாவா மன்றத்தினர் ஆகியோர்களுக்கு நன்றி.
எல்லாம் வல்ல இறைவன் ஹலிமா டிரஸ்ட் நிறுவனதினற்கு மற்றும் அவர்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் நல் அருள் மற்றும் பரக்கத் புரிவானாக … ஆமீன்.