நமதூரின் ஏழை எளியோர்களின் வீட்டில் ஏற்படும் மௌத் சம்பவங்களுக்கு உதவ வேண்டி கோட்டக்குப்பம் குவைத் ஜமாத் சார்பாக ஷாமியானா டெண்ட்டும், 50 பிளாஸ்டிக் நாற்காலிகள் இலவசமாக வாங்கபட்டுள்ளது.
மேலும் இந்த வசதியை பயன்படுத்த கோட்டக்குப்பம் பஜார் தெருவில் இருக்கும் அலுவலகத்தை நாடவும். அங்கே குறித்து வைத்துள்ள மொபைல் தொலைபேசி எண்ணில் அழைத்தால் உங்களுக்கு உதவ தயாராக உள்ளார்கள்.
குவைத் ஜமாத்தை சேர்ந்த உறுப்பினர்கள்,நிர்வாகிகள்,செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் இந்த காரியம் வெற்றியடைய பாடுபட்ட நல்லுள்ளங்கள் அனைவருக்கும் அவர்களின் குடும்பதாருக்காகவும் நாம் அனைவரும் படைத்தவனிடம் துவா செய்வோம்.