கோட்டக்குப்பம் இஸ்லாமிய பொதுநலச் சங்கம் (Kottakuppam Islamic Welfare Society – KIWS) சார்பாக நேற்று ( 14-5-2017) நடைபெற்ற இஸ்லாமிய கோடைக்கால பயிற்சி நிறைவு மற்றும் மதரஸா மாணவ-மாணவியர்களுக்கு பரிசளிப்பு விழா கோட்டக்குப்பம் பரகத் நகரில் நடைபெற்றது.
இதில் மதரஸா மாணவ மாணவியர்களின் சூரா – துவா சொல்லுதல், தொழுகை பயிற்சி, ஒழுக்க போதனைகள், ஆரோக்கிய வாழ்வு விழிப்புணர்வு, இஸ்லாமிய நாடங்கள், விறுவிறுப்பான பட்டிமன்றங்கள், மரம் வளர்த்தல் விழிப்புணர்வு, ஜனாஸா பயிற்சி போன்ற பல்சுவை நிகழ்ச்சிகள் நடைப்பெற்றது. இறுதில் மதரஸா மாணவ-மாணவியர்களுக்கு சான்றிதழ் வாங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பெற்றோர்கள் பெரும் திரளாக கலந்துக்கொண்டு சிறப்பித்தனர். இந்நிகழ்ச்சிக்கு கோட்டக்குப்பம் இஸ்லாமிய பொதுநலச் சங்கத்தின் நிர்வாகிகள், ஆசிரியர்கள் மற்றும் உறுப்பினர்கள் ஏற்பாடுகள் செய்தனர்.
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.