கோட்டக்குப்பம் ரஹ்மத் நகர் கடற்கரை திடலில் மழைக்காக இன்று (08/05/2017)சிறப்பு தொழுகை நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும் நிலவும் கடும் குடிநீர் பஞ்சத்தை போக்கவும், மழை வேண்டியும் பொதுமக்கள் பெருந்திரளாக தொழுகையில் கலந்துகொண்டனர் . கோட்டக்குப்பம் ஜாமியா மஸ்ஜித் பள்ளி இமாம் ஹஸ்ரத் முஹம்மத் யாசின் அவர்கள் தொழுகை நடத்தினார்கள். மேலும் மௌலவி ஜஹீருதீன் ஹஜ்ரத் அவர்கள் மழைக்காக கூட்டு துவா கேட்டார்கள்.