நேற்று 2.5.17 அன்று அஞ்சுமன் நுஸ்ரத்துல் இஸ்லாம் நூலகம் நடத்திய, வக்பு நிர்வாகம் – வளர்ச்சி – மேம்பாடு குறித்த பயிலரங்கம் கோட்டக்குப்பம் ஷாதி மஹாலில் நடைபெற்றது. அதில் புதுவை வக்பு வாரிய செயலாளர் S. A. சுல்தான் அப்துல் காதர் மற்றும் மௌலானா அஷ்ரப் அலி உலவி ஆகியோர், வக்பு நடைமுறைகள் மற்றும் செயல்திட்டங்கள் குறித்து விளக்கவுரை நிகழ்த்தினார். அஞ்சுமன் பொருளாளரும் முன்னாள் முத்தவல்லியுமான ஹாஜி அப்துல் முத்தலிப் ஜாமிஆ மஸ்ஜித் நிர்வாகிகளுக்கு “அஞ்சுமன் விருது” வழங்கி வாழ்த்துரை வழங்கினார். விழா ஏற்பாடுகளை அஞ்சுமான் செயலாளர் கலீமுல்லா செய்திருந்தார்.