தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி நிறுவனம், தமிழகம் முழுவதும் அமைத்துள்ள 303 நிரந்தர ஆதார் சேர்க்கை மையங்களில், ஆதார் அட்டை திருத்தம் செய்துகொள்ளும் வசதி, இன்று முதல் வழங்கப்பட உள்ளது.
தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி நிறுவனம், தமிழகம் முழுவதும் 303 நிரந்தர ஆதார் சேர்க்கை மையங்கள் அமைத்துள்ளன. அந்த மையங்களில், ஆதார் அட்டை திருத்தம் இன்று முதல் வழங்கப்பட உள்ளது. அதாவது, ஏற்கெனவே ஆதார் எண் பெற்றுள்ளவர்கள், தங்களது ஆதார் அட்டையில் குறிப்பிட்டுள்ள விவரங்களை, இன்று முதல் திருத்தம் செய்துகொள்ளலாம். பொதுமக்கள் கைரேகை அல்லது கருவிழியினைப் பதிவுசெய்து, தங்களது பெயர், பிறந்த தேதி, பாலினம், முகவரி, கைப்பேசி மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றைத் திருத்தம் செய்துகொள்ளலாம். 5 வயது முதல் 15 வயது வரை உள்ளவர்கள் இலவசமாக திருத்தம் செய்துகொள்ளலாம். மற்றவர்கள், 10 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை கட்டணம் செலுத்த வேண்டும்.
தலைமைச் செயலகம், அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்கள், வருவாய் நிர்வாக ஆணையர் அலுவலகம் , பெருநகர சென்னை மாநகராட்சித் தலைமை அலுவலகம், பெருநகர சென்னை மாநகராட்சியின் மண்டல அலுவலகங்கள் ஆகிய இடங்களில் செயல்பட்டு வரும் நிரந்தர ஆதார் சேர்க்கை மையங்களில், ஆதார் திருத்தம் செய்துகொள்ளலாம். இதுபற்றிக் கூடுதல் தகவல்களைத் தெரிந்து கொள்ள, 1800 425 291 என்ற இலவச எண்ணைத் தொடர்புகொள்ளலாம்.
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.