மின்மோட்டார்கள் மூலம் தண்ணீரை உறிஞ்சியவர்கள் மீது பேரூராட்சி அதிரடி நடவடிக்கை
கோட்டக்குப்பம் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இங்கு வசிக்கும் மக்களுக்கு பேரூராட்சி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. பருவமழை பொய்த்துவிட்டதால் இந்த பகுதியில் போதுமான தண்ணீர் இல்லை. இதனால் குடிநீர் பற்றாக்குறையால் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.
இந்தநிலையில் பேரூராட்சி மூலம் வீடுகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படும்போது சிலர் திருட்டுத்தனமாக குடிநீர் குழாயில் வரும் தண்ணீரை மின்மோட்டார்கள் மூலம் உறிஞ்சுவதாகவும், இதனால் பல வீடுகளுக்கு குடிநீர் கிடைப்பதில்லை எனவும் பேரூராட்சி அதிகாரிகளிடம் புகார்கள் தெரிவிக்கப்பட்டன.
இந்த நிலையில் கோட்டக்குப்பம் பேரூராட்சி செயல் அலுவலர் செந்தில்குமார் மற்றும் ஊழியர்கள் வீடு, வீடாக சென்று திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது சில வீடுகளில் திருட்டு தனமாக மின்மோட்டார்கள் மூலம் குடிநீர் உறிஞ்சப்படுவதை கண்டு பிடித்தனர். அந்த பகுதியில் 15–க்கும் மேற்பட்ட மின்மோட்டார்களை அவர்கள் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து செயல் அலுவலர் செந்தில்குமார் கூறும்போது, குடிநீர் குழாயில் இருந்து மின்மோட்டார் மூலம் தண்ணீர் உறிஞ்சினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்.
அந்த செய்திக்கு சம்மந்தமான புகைப்படம் தான் உள்ளது – பறிமுதல் செய்யப்பட்ட மோட்டார். இதற்கு பேரூராட்சி புகைப்படம் தேவைப்படவில்லை. மேலும் மசூதி புகைப்படம் கோட்டகுப்பத்தின் அடையாளம்.
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.
நற்செய்தி
LikeLike
அது இருக்கட்டும் பேரூராட்சி கட்டிடம் photo போடாம மசூதி photo வச்சிருக்கிங்க
LikeLike
அந்த செய்திக்கு சம்மந்தமான புகைப்படம் தான் உள்ளது – பறிமுதல் செய்யப்பட்ட மோட்டார். இதற்கு பேரூராட்சி புகைப்படம் தேவைப்படவில்லை. மேலும் மசூதி புகைப்படம் கோட்டகுப்பத்தின் அடையாளம்.
LikeLike