பன்றி காய்ச்சல் “சுவைன் புளூ” என்ற வைரசால் பரவுகிறது. இது “ஆர் தோமைசோ வெரிடேட்” என்ற வைரஸ் குடும்பத்தை சேர்ந்தது. “சுவைன் புளூ” வைரசிலேயே 5 வகை உள்ளன. அதில் இப்போது பரவியுள்ள வைரசை “எச்-1, என்-1” என்று பட்டியலிட்டு உள்ளனர்.
இந்த வைரஸ் பன்றி மற்றும் கோழிகளில் பரவி இருக்கும். எனவே பன்றி, கோழி பண்ணைகளில் பணியாற்றுபவர்களுக்கு விலங்குகளில் இருந்து பரவி வருகிறது.
வைரஸ் உடலில் பரவியதும் சளி பிடிக்கும். உடனே காய்ச்சல் வரும், தொண்டை வலி, சோர்வு, உடல் வலி, பசியின்மை போன்றவை வரும். முதல் 5 நாட்களுக்கு சாதாரண காய்ச்சல் போல இருக்கும். பின்னர் காய்ச்சல் கடுமையாகும். தாங்க முடியாத உடல்வலி, வாந்தி, வயிற்று போக்கு ஏற்பட்டு உயிரிழப்பும் ஏற்படும்.
இந்த நோய் ஏற்பட்டு இருப்பதை சாதாரண முறை சோதனைகளால் கண்டு பிடிக்க முடியாது. பல்வேறு கட்ட சோதனை நடத்தினால்தான் தெரியவரும்.
நோய் தாக்கியவரிடம் இருந்து வைரஸ் மற்றவர்களுக்கும் வேகமாக பரவும். சளி மூலம் அதிக அளவில் பரவும். நோய் தாக்கியவர் உமிழ் நீர், சளியை தொட்டு விட்டு கை கழுவாமல் மற்றவரை தொட்டால் அதன் மூலமும் பரவி விடும். எனவே நோய் தாக்கியவரை தனிமை படுத்தினால்தான் மேலும் பரவாமல் தடுக்க முடியும்.
பன்றி காய்ச்சல் நோய் முதன் முதலில் பரவியது 1918-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. 1976-ல் அமெரிக்க படைவீரர்களை நோய் தாக்கியது. 2 ஆண்டுகளுக்கு முன்பு பிலிப்பைன்சில் பரவியது.
இந்த நோயை தடுக்க தடுப்பூசி உள்ளது. வைரஸ் எதிர்ப்பு மருந்துகளை கொடுத்தாலும் குணமாகும். முதலிலேயே கண்டு பிடித்து சிகிச்சை அளித்துவிட்டால் உயிரிழப்பு ஏற்படாது. வேறு நோய் என்று கருதி அலட்சியப்படுத்தினாலும் நோயை முற்றவிட்டாலும் ஆபத்து ஏற்படும்.
பன்றி காய்ச்சல் முதன் முதலில் 1918-ம் ஆண்டு ஸ்பெயினில் பரவியது. பின்னர் உலகம் முழுவதும் பரவி 10 கோடி பேர் பலியானார்கள்.
1968-ம் ஆண்டு ஹாங்காங்ஙகில் பரவி உலகம் முழுவதும் தொற்றியது. இதில் 10 லட்சம் பேர் பலியானார்கள்.
நோய் அறிகுறிகள்
* இடைவிடாத காய்ச்சல்
* மூக்கில் நீர்வடிதல்
* தொண்டையில் வலி
* வயிற்று போக்கு
* மயக்கம்
* பசியின்மை
* சளி தொல்லை
* சாப்பாடு மீது வெறுப்பு
* வாந்தி எடுத்தல்
******************************************************
வேகமாக பரவி வரும் பன்றிக் காய்ச்சலால் பீதி ஏற்பட்டுள்ள நிலையில் பன்றிக் காய்ச்சலுக்கான அறிகுறிகள் தென்பட்டால் அவசர கால நடவடிக்கையாக பின்வரும் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். . * காய்ச்சல், இருமல், தொண்டை வலி, ஜலதோஷம், மூக்கொழுகல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் குடும்ப மருத்துவரை அணுக வேண்டும். அவர் பன்றிக்காய்ச்சலுக்கான அறிகுறிகள் என்று தெரிவித்தால் இதற்கென அருகாமையில் உள்ள அரசு சோதனை மையம் அல்லது மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்.
* பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டால் முகமூடி அணிந்துதான் வெளியே செல்ல வேண்டும்.
* பன்றிக்காய்ச்சலுக்கான சோதனைக்கு மாதிரிகள் சேகரிக்கப்படும். அப்பொழுது 7 நாட்களுக்கு வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும்.
* மாதிரிகள் ஆய்வுக்கு ஒரு நாளில் இருந்து இரு நாட்கள் வரை ஆகும். அதில் பாசிட்டிவ் என தெரியவந்தால் அதன் பிறகு பன்றிக்காய்ச்சல் வைரசுக்கான (ஏ1 N1) சோதனை நடத்தப்படும். அதே சமயத்தில் உடனடியாக மருத்துவமும் தொடங்கப்படும்.
* நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டால் மருத்துவமனைகளில் சேர்ந்து சிகிச்சை பெறலாம் அல்லது வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெறலாம்.
* 7 நாட்களுக்குப் பிறகு அறிகுறிகள் மேலும் எதுவும் தென்படாத பட்சத்தில் வீடு அல்லது மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள்.
———————————————————————-
பன்றி காய்ச்சல் வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்?
என்னென்ன செய்யக்கூடாது? என்பது பற்றிய சில யோசனைகளை பொது மக்களுக்கு மத்திய அரசு தெரிவித்து உள்ளது. அதனை பின்பற்றி பன்றிக் காய்ச்சல் பரவுவதை தடுப்போம்.
சுகாதாரமாக வாழுங்கள்
தினமும் குறைந்தபட்சம் ஒரு வேளை சுத்தமான நீரில் குளியுங்கள். நோய்க்கிருமி எதிர்ப்பு சக்தி கொண்ட சோப்பைக் கொண்டு அடிக்கடி கைகளை கழுவுங்கள். குழாய் தண்ணீரில் குறைந்த பட்சம் 15 வினாடிகள் கைகளை அலசுங்கள்.
வெளியில் சென்று விட்டு வந்ததும் கை, கால், முகம், கழுத்துப் பகுதிகளை சுத்தமான தண்ணீரால் நன்கு கழுவுங்கள்.
இரவில் குறைந்த பட்சம் 8 மணி நேரம் நன்றாக தூங்க வேண்டும். உடல் ஆரோக்கியத்திற்கு உறக்கம் அவசியம்.
ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 8 முதல் 10 தம்ளர் தண்ணீர் குடியுங்கள்.
சத்தான உணவு வகைகளை சாப்பிட்டு நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொள்ளுங்கள். இதற்கு தானிய வகைகள், பசுமையான காய்கறிகள், வைட்டமின் சத்துக்கள் நிறைந்த பழங்கள் சாப்பிடுங்கள்.
மது அருந்த வேண்டாம்
மது அருந்தினால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும். இதனால் பன்றி காய்ச்சல் போன்ற நோய்க்கிருமிகள் உடலுக்குள் எளிதாக ஊடுருவும் என்பதால் மது அருந்துவதை தவிர்த்து விடுங்கள்.
மிதமான உடற்பயிற்சி உடலில் ஆக்சிஜனின் அளவை அதிகரித்து நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும் என்பதால், தினசரி 30 முதல் 40 நிமிடம் வேகமான நடைப்பயிற்சி மேற்கொள்ளுங்கள். சுறுசுறுப்பாகவும் உற்சாகமாகவும் இருங்கள்.
இருமுவதன் மூலமும், தும்முவதன் மூலமும் பன்றி காய்ச்சல் நோய்க்கிருமி ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவும் என்பதால், நோய் பாதிப்பு உள்ளவர்களிடம் இருந்து விலகி இருங்கள். உடல் ரீதியாகவும் தொடர்பு வைத்துக் கொள்ளாதீர்கள்.
வெளியில் செல்வதை தவிருங்கள்
தேவை இல்லாமல் வெளியில் செல்வதையும், கூட்டம் உள்ள இடங்களுக்கு செல்வதையும் தவிருங்கள். கண்கள், மூக்கு, வாய் மூலம் நோய்க்கிருமிகள் உடலுக்குள் செல்லும் என்பதால் அவற்றை தொடுவதையும் தவிருங்கள்.
உடல் நலக் குறைவைத் தவிர வேறு எந்தக் காரணத்திற்காகவும் குழந்தைகளை மருத்துவமனைக்கு அழைத்து வராதீர்கள்.
குழந்தைகளை வெளியில் கொண்டு செல்வதைத் தவிருங்கள்.
வெளியில் சென்றுவிட்டு வீட்டிற்கு வந்ததும் குழந்தைகளைத் தூக்காதீர்கள். உடனடியாக உடலை சுத்தம் செய்த பின்னரே அடுத்த வேலையைத் துவக்குங்கள்.
மருத்துவரை அணுகுங்கள்
இருமல், காய்ச்சல் இருந்தால் மருத்துவரை சந்தித்து ஆலோசித்து, அவரது யோசனைகளின்படி மருந்து சாப்பிடுங்கள்.
சாதாரண காய்ச்சல் என்று நீங்களாக எந்த மருந்தையும் வாங்கி சாப்பிடாதீர்கள். காய்ச்சல் வந்தவரின் அருகில் செல்வதை தவிர்த்துவிடுங்கள். குழந்தைகளையும் அனுப்ப வேண்டாம்.
வெளி நாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்களை சென்று பார்ப்பதைத் தவிர்த்துவிடுங்கள்.
பன்றி காய்ச்சல் பரவுவதை தடுக்க அவ்வப்போது அரசு வெளியிடும் வழிகாட்டு நெறிமுறைகளை தெரிந்து கொண்டு, அதன்படி நடந்து கொள்ளுங்கள்.
பன்றி இறைச்சி உண்பது தடை செய்யப்பட்டுள்ளது பற்றி குர்ஆனின் தெளிவாக்கம்:
பன்றி இறைச்சி உண்பது தடை செய்யப்பட்டிருப்பது பற்றி அருள்மறை குர்ஆனில் குறைந்தது நான்கு அத்தியாயங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
‘தானாகவே செத்ததும் இரத்தமும் பன்றியின் மாமிசமும் அல்லாஹ் அல்லாத பெயர் சொல்லப்பட்டதும் ஆகியவைகளைத்தான் உங்கள் மீது ஹராமாக ஆக்கியிருக்கிறான்.’ (அல்-குர்ஆன் அத்தியாயம் – 02 வசனம் 173)
மேற்படி கருத்துக்களை அருள்மறையின் அத்தியாயம் ஐந்தின் மூன்றாவது வசனத்திலும் அத்தியாயம் ஆறு – 145வது வசனத்திலும் – அத்தியாயம் பதினாறு – 115வது வசனத்திலும் காணலாம். அருள்மறையின் மேற்படி வசனங்கள் – இஸ்லாத்தில் பன்றி இறைச்சி உண்பது தடை செய்யப்பட்டிருக்கிறது என்பதற்கு ஆதாரமாக அமைந்துள்ளன.
பன்றி இறைச்சி உண்ணத் தடை என்று பைபிளும் குறிப்பிடுகின்றது.
கிறஸ்தவர்களின் வேத புத்தகமான பைபிள் குறிப்பிடும் தடைகளைப் பற்றி கிறிஸ்தவர்களுக்கு எடுத்துச் சொன்னால் அவர்களும் அறிந்து கொள்வார்கள். பன்றி இறைச்சி உண்ணத் தடை என்று பைபிளிளும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பைபிளின் அத்தியாயம் 11 – லேவியராகமம் வசனம் 7 முதல் 8 வரையிலும் பைபிளின் அத்தியாயம் 14 – உபாகமம் வசனம் 8 ம் பன்றி இறைச்சி உண்ணத் தடை பற்றி அறிவிக்கின்றன.
மேலும் பைபிளின் அத்தியாயம் 65 – ஏசாயா 2 முதல் 5 வரையுள்ள வசனங்களில் பன்றி இறைச்சி உண்ணத் தடை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
பன்றி இறைச்சி உண்பதால் – மனிதனுக்கு ஏராளமான நோய்கள் உண்டாகின்றன.
எந்த விஷயத்தையும் முஸ்லிம் அல்லாதவர்களும் கடவுளே இல்லை என்று மறுப்பவர்களும் காரணத்துடனும் தர்க்க ரீதியாகவும் அறிவியல் உண்மையுடனும் சொன்னால்தான் ஏற்றுக் கொள்வார்கள். பன்றி இறைச்சி உண்பதால் மனிதனுக்கு எழுபது விதமான நோய்கள் உண்டாகிறது. பன்றி இறைச்சி உண்பதால் மனிதனின் வயிற்றில் வட்டப்புழு (RoundWorm) ஊசிப்புழு (PinWorm) கொக்கிப்புழு (HookWorm) போன்ற குடற்புழுக்கள் உண்டாகின்றன. பன்றி இறைச்சி உண்பதால் மனிதனின் வயிற்றில் நாடாப்புழு உருவாகிறது. இந்த நீளமான நாடாப்புழு மனித குடலின் அடிப்பகுதியில் சென்று தங்கிவிடுகிறது. ஆது இடும் முட்டை இரத்த நாளங்கள் வழியாக உடலின் எல்லாப் பாகங்களுக்கும் பரவுகிறது. இந்த முட்டை மனித மூளையச் சென்றடைந்தால் மனிதன் தன் நினைவாற்றலை இழப்பான். இந்த முட்டை மனித இதயத்தைச் சென்றடைந்தால் மனிதனுக்கு மாரடைப்பு உண்டாகிறது. இந்த முட்டை மனிதனின் கண்களைச் சென்றடைந்தால் மனிதன் கண்பார்வையை இழக்கிறான். இந்த முட்டை மனிதனின் ஈரலைச் சென்றடைந்தால் மனிதனின் ஈரல் பாதிக்கப்படுகிறது. இவ்வாறு பன்றி இறைச்சி உண்பதால் மனித வயிற்றில் உருவாகும் நாடாப்புழுவின் முட்டைகள் மனித உருப்புகள் அனைத்தையும் செயலிழக்கச் செய்யும் வல்லமை உள்ளவை.
பன்றி இறைச்சியில் திரிகூரா திச்சுராஸிஸ் (Trichura Tichurasis) என்ற பெயரையுடைய மற்றொரு ஆபத்தான குடற்புழு உள்ளது. பன்றி ,றைச்சியை நன்றாக வேக வைத்துவிட்டால் ,து போன்ற புழுக்கள் மரணித்து விடுகின்றன என்பது ஒரு பொதுவான அதே சமயம் தவறான கருத்து மக்களிடையே இருக்கிறது. இது பற்றிய ஆய்வு ஒன்று அமெரிக்காவில் நடத்தப்பட்டபோது – இருபத்து நான்கு பேர் திரிகூரா திச்சுராஸிஸ் (Trichura Tichurasis) என்று குடற்புழு நோயால் தாக்கப்பட்டிருந்தார்கள். அவர்களில் இருபத்தி இரண்டு பேர் பன்றி இறைச்சியை நன்றாக வேகவைத்து சாப்பிட்டவர்கள் என்று கண்டறியப்பட்டது. சாதாரணமான வெப்பத்தில் சமைக்கப்படும் பன்றி இறைச்சியில் – குடற்புழு உண்டு என மேற்படி ஆய்விலிருந்து நாம் அறியும் செய்தி
பன்றி இறைச்சியில் கொழுப்புச் சத்து அதிகம்.
பன்றி இறைச்சியில் மாமிச சத்தைவிட கொழுப்புச் சத்தே அதிகம். பன்றி இறைச்சி உண்பதால் ஏற்படும் கொழுப்புச் சத்து மனித இரத்த நாளங்களை அடைத்து விடுவதால் – மனிதனுக்கு இரத்த அழுத்த நோயும் – மாரடைப்பும் உண்டாகின்றது. எனவே அமெரிக்கர்களில் ஐம்பது சதவீதம் பேர் இரத்த அழுத்தம் உள்ளவர்களாக இருப்பதில் ஆச்சரியம் இல்லை.
உலகில் உள்ள மிருகங்களில் எல்லாம் கேடுகெட்ட மிருகம் பன்றி.
பூமியல் உள்ள விலங்கினங்களில் எல்லாம் கேடுகெட்ட விலங்கினம் பன்றி. பன்றி சேற்றிலும் சகதியிலும் மலத்திலும் வாழக்கூடிய விலங்கினம். கடவுளின் படைப்பில் ஒரு சிறந்த சுத்திகரிக்கும் மிருகம் பன்றி. நவீன கழிப்பறை வசதி இல்லாத கிராமப்புறங்களில் மனிதர்கள் – காடுகளிலும் – வெட்டவெளியிலும்தான் மலஜலம் கழிப்பார்கள். இந்த மலத்தை சுத்தம் செய்வது பன்றிதான்.
ஆஸ்திரேலியா போன்ற மேலை நாடுகளில் பன்றிகள் மிக சுத்தமான சூழ்நிலையில் வளர்க்கப்படுகின்றன என சிலர் வாதிட முற்படலாம். எந்த மாதிரி சுத்தமான சூழ்நிலையிலும் பன்றிகள் ஒன்றாகத்தான் அடைத்து வைக்கப்படுகின்றன. எத்தனைதான் சுத்தமான சூழ்நிலையில் நீங்கள் பன்றிகளை வைத்திருந்தாலும் – பன்றி இயற்கையாகவே கேடு கெட்டவை. தன்னுடைய மலத்தையும் – பிறருடைய மலத்தையும் சுவைத்துத் தின்னும் மிருகம் பன்றி.