இது நாள் வரை சிறப்பு நிலை பேரூராட்சியை இருந்த வந்த கோட்டக்குப்பம், தற்போது மூன்றாம் நிலை நகராட்சியாக தேர்வு செய்ய அதிகம் வாய்ப்பு உள்ளது.
தமிழ்நாட்டில் சிறப்பு நிலை பேரூராட்சி அடுத்த நிலையில் அதிகமான மக்கள் தொகையுடன் மற்றும் அதிக ஆண்டு வருவாயுடைய ஊர்களை மூன்றாம் நிலை நகராட்சிகளாகப் தரம் உயரும் . இந்த நகராட்சிகளுக்கு அரசு அதிகாரிகள் நகராட்சி ஆணையாளர்களாக அரசின் மூலம் நியமிக்கப்படுகின்றனர். இந்த நகராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் இருந்து நகர்மன்ற உறுப்பினர்கள் மக்களால் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்த நகர்மன்ற உறுப்பினர்களில் இருந்து நகர்மன்றத் தலைவர் தேர்வு செய்யப்படுகின்றார். இவருக்கு அடுத்தபடியாக நகர்மன்றத் துணைத் தலைவராகத் தேர்வு செய்யப்படுகின்றார். நகர்மன்ற உறுப்பினர்களைக் கொண்டு நடத்தப்படும் நகராட்சி மன்றக் கூட்டங்களில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களின்படி ஆணையாளர் அந்தப் பணிகளை தனக்கு கீழுள்ள அலுவலர் மற்றும் ஊழியர்களைக் கொண்டு செயல்படுத்துகிறார்.
நகராட்சியாக தரம் உயர்ந்தால் வீட்டு வாடகை, நிலமதிப்பு, தண்ணீர், வீட்டு மற்றும் சொத்து வரி உள்ளிட்டவை பல மடங்கு உயரும் வாய்ப்பு உள்ளது. பேரூராட்சி எல்லைகள் விரிவுபடுத்துவதன் மூலம் மக்கள் குடியேற்றம் அதிகரிப்பதோடு, பல்வேறு வளர்ச்சித்திட்டங்களுக்கும் வழிவகுக்க முடியும்.
எல்லைகளை விரிவுபடுத்துவது அடிப்படை கட்டமைப்பை தரம் உயர்த்துவதோடு, நகராட்சியின் ஒருங்கிணைந்த வளர்ச்சியாகவும் அமையும். ஏற்கனவே பேரூராட்சி தரத்தில் நமதூருக்கு தேவையான குறைந்த பட்ச சலுகைகள் கூட கிடைக்காமல் உள்ளது. உதாரணத்துக்கு நமதூரில் பேரூராட்சி சார்பில் நிழல் குடை கூட அமைக்காமல் பொதுமக்கள், வயதானவர்கள், குழந்தைகள் வெயில் மழையில் பேரூந்துக்காக காத்து இருக்கும் நிலையில் உள்ளனர்.
நல்ல தரமான சாலை மற்றும் கழிவு நீர் வெளியேற்றும் விஷயத்தில் நமதூர் மற்ற ஊர்களை விட அதிகம் முன்னேற்றி உள்ளது. தரமான குடிநீர் எல்லா நேரமும் அனைவருக்கும் கிடைக்க ஏற்பாடு செய்த பேரூராட்சிக்கு ஒரு சபாஷ். கல்வி விஷயத்தில் தரமான கல்வி கூடங்கள் நமதூரில் உள்ளது.
கோட்டகுப்பத்துக்கு மூன்றாம் நிலை நகராட்சி அந்தஸ்து கிடைத்தால் கூடுதல் நிதி ஒதுக்கீடு கிடைக்கும். அதன்மூலம் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தலாம்.
ஆனாலும் இவ்வளவு பெரிய ஊரக இருந்தும் நமதூருக்கு ஒரு ஆரம்ப சுகாதார மையம் இல்லை, பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தாய் சேய் நல விடுதி பராமரிப்பில்லா நிலையில் உள்ளது. தீ அணைப்பு நிலையம் இல்லை. பொதுமக்கள் வசதிக்காக பல நியாய விலை கடை அமைக்கணும்.
வருங்காலத்தில் கோட்டகுப்பதில் பாதாள சாக்கடை திட்டம் மற்றும் அணைத்து மின் இணைப்புகளும் நிலத்தின் கீழ், கேபிள் வழியாக வீடுகளுக்கு வழங்க ஏற்பாடு செய்யவேண்டும்.
அரசு அதிகாரப்பூர்வமாக நகராட்சியாக அறிவிக்கும்
வரை காத்து இருப்போம் ……..
உள்ளாட்சி தேர்தலால் அறிவிப்பு தள்ளி போகலாம்
அல்லது முன்னாடியே இருக்கலாம் …