கோட்டக்குப்பம் ரஹ்மத் நகர் பகுதியில் முன்பு நேற்று முன்தினம், புதுச்சேரி மாநிலம் வில்லியனுார் விஸ்வநாதன்,24; முத்தியால்பேட்டை மணிகண்டபிரபு,23; பச்சயைப்பன்,23; ராமமூர்த்தி,23; வைத்திகுப்பம் கணேஷ்,20; சாமிபிள்ளைதோட்டம் மணி,26; லாஸ்பேட்டை ஜோதி,23; ஆகியோர் மது அருந்தினர்.இவர்கள் காலி மதுபாட்டில்களை அருகே உள்ள காசீம் என்பவரின் வீட்டு கேட்டில் எரிந்ததோடு, அங்கேயே சிறுநீர் கழித்தனர். இதை தட்டி கேட்ட காசீம் மற்றும் அவரின் உறவினர்கள் அப்துல்பாசித் , நுார் ஆகியோரை, ஏழு பேரும் சேர்ந்து அரிவாளால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.பாதிக்கப்பட்டவர்கள் புதுவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர், மேலும் புகாரின் பேரில் , கோட்டக்குப்பம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விஸ்வநாதன் உட்பட ஏழு பேரையும் கைது செய்தனர்.
Massallah.god.Bless.you.
LikeLike