புதுவை அரசு மருத்துவமனை சாதனை – குறுகிய காலத்தில் 100 இருதய அறுவை சிகிச்சை
இனி பலலட்சம் செலவு செய்து சென்னை மற்றும் புதுவையில் இருக்கும் தனியார் மருத்துவ மனையை நாடாமல், பொதுமக்கள் புதுவை அரசு மருத்துவமனையில் இலவசமாக தரமான சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம். இந்த சாதனை நிகழ்த்திய மருத்துவர்கள் மற்றும் புதுவை அரசுக்கு பொதுமக்களின் சார்பில் நன்றி……..
புதுச்சேரி இந்திராகாந்தி அரசு பொதுமருத்துவமனை, இருதய அறுவை சிகிச்சையில் 100வது அறுவை சிகிச்சை என்ற சாதனையை படைத்துள்ளது.புதுச்சேரி இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனையில், நவீன இருதய அறுவை சிகிச்சை வசதி கடந்த காலங்களில் இல்லை. ஆஞ்சியோகிரம் உள்ளிட்ட சில சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன.
ஏழை நோயாளிகள் இருதய அறுவை சிகிச்சைக்கு, சென்னைக்கு செல்ல வேண்டி இருந்தது. அதற்காக, நோயாளிக்கு ரூ. 2 லட்சம் வரை அரசு நிதியுதவி செய்தது.புதுச்சேரியை சேர்ந்த நோயாளிகள் சென்னைக்கு சென்று அறுவை சிகிச்சை செய்வதில் ஏற்பட்ட சிரமம் மற்றும் கூடுதல் செலவை கருத்தில் கொண்டு, இந்திராகாந்தி அரசு பொது மருத்துவமனையிலேயே, இருதய அறுவை சிகிச்சை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.சென்னை பிரண்டியர் லைப்லைன் மருத்துவமனையுடன் கடந்த 2015ம் ஆண்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து, இருதய அறுவை சிகிச்சை துவக்கப்பட்டது.
200 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்திராகாந்தி அரசு மருத்துவமனையில், சிக்கலான இருதய அறுவை சிகிச்சை துவக்கப்பட்ட சில ஆண்டுகளிலேயே, சத்தம் இல்லாமல் சாதித்துள்ளது. கடந்த 16ம் தேதி 100வது இருதய அறுவை சிகிச்சை நடந்துள்ளது. குறுகிய காலத்திலேயே இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.
இதுவரை 102 இருதய அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 84கரோனரி இருதய பைபாஸ் அறுவை சிகிச்சை, 15 வால்வு மாற்றமும் உள்ளடக்கம். இதுமட்டுமின்றி 25 பேருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.,சிக்கலான இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளும்போது சில நேரங்களில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு ஏற்படுவது உண்டு. ஆனால் புதுச்சேரி இந்திராகாந்தி அரசு பொதுமருத்துவமனை, இந்த வகையிலும் புது சாதனை படைத்துள்ளது. தேசிய அளவில் இருதய அறுவை சிகிச்சை உயிரிழப்பு 4 சதவீதம் வரை இருக்கும்போது, புதுச்சேரி மாநிலத்தில் ஒரு சதவீதம் மட்டுமே உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த வகையில் புதுச்சேரி அரசு பொதுமருத்துவமனை தற்போது புதுச்சேரி மக்களின் இதயத்தில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இருதய அறுவை சிகிச்சைக்கான சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பெருநகரங்களுக்கு செல்ல தேவையில்லை என்பதை உணர்த்தியுள்ளது.
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.