
ஒரு மனிதனை வாழவைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்” – திருக்குர்ஆன் 5:32 – இரத்ததானம் செய்தவர்களுக்கு ஏகஇறைவன் மறுமையில் சிறந்த நற்கூலி வழங்குவானாக..!!!
கோட்டக்குப்பம் இஸ்லாமிய பொதுநலச் சங்கம் Kottakuppam Islamic Welfare Society (KIWS) மற்றும் ஜிப்மர் மருத்துவமனை இணைந்து நடத்திய “தன்னார்வ இரத்ததான முகாம்” இன்று 26-1-2017, கோட்டக்குப்பம் காயிதேமில்லத் ஆர்ச் அருகில் நடைபெற்றது.
இம்முகாமில் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு ஆர்வத்துடன் இரத்ததானம் செய்தனர். மேலும் விபத்து மற்றும் அறுவைசிகிச்சை போன்ற அவசர நேரங்களில் இரத்த தானம் செய்ய முன்வருவோம் என்று உறுதிமொழி எடுத்தனர். பெண்கள் கலந்து கொண்டு இரத்ததான வழங்கியது வியப்பளித்தது.
இம்முகாமில் கோட்டக்குப்பம் இஸ்லாமிய பொதுநலச் சங்கத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் உடன் இருந்தனர்.
Like this:
Like Loading...