சென்னை உள்பட தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் தீவிரமடைந்துள்ளது. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், பீட்டா அமைப்பைத் தடை செய்ய வலியுறுத்தியும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் எழுச்சிப் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்துக்கு ஆதரவாக இளைஞர்களும், மாணவர்களும் அணிதிரண்டு வருவதால் அவர்களை சமாளிக்க முடியாமல் போலீஸார் திணறினர்.
இந்நிலையில் கோட்டக்குப்பம் மக்கள் பொதுநல கூட்டமைப்பின் சார்பாக ஜல்லிக்கட்டு தடையை நீக்கி கோரியும், பீட்டா அமைப்பை தடை செய்ய கோரியும், அரசு ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் கொண்டுவர கோரியும், கோட்டக்குப்பம் பேரூராட்சி திடலில் காலை 8 மணி முதல் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
தமிழக பாரம்பரிய, கலாச்சாரத்தை பாதுகாக்க, மாணவர்கள், இளைஞர்கள், முதியவர்கள், பெண்கள் என கட்சி பாகுபாடு இன்றி தமிழர்களாய் ஒரு அணியில் போராடுகிறார்கள்.
இதே போல் புதுச்சேரியில் போராட்டம் வலுப்பெற்று வருகிறது, அதன் காட்சிகளும் உங்களுக்காக……