“நூலகமும் இன்றைய மாணவர்களும்” என்ற தலைப்பில் அஞ்சுமன் நூலகம் ஏற்பாடு செய்திருந்த இந்த போட்டியில் 5 பள்ளிகளை சார்ந்த 35 மாணவ, மாணவிகள் பங்கேற்று தங்களின் பேச்சாற்றலை வெளிப்படுத்தினர்.. போட்டியாளர்களில் பலர் தங்களுக்கு இதுபோன்ற வாய்ப்புகள் இன்றைய கல்விச்சூழலில் கிட்டுவதேயில்லை என்று சொன்னது இது போன்ற நிகழ்வுகளின் தேவைகளை முகத்தில் அறைந்தது.. மாணவர்களின் ஈடுபாடும் ஆர்வமும் நிகழ்ச்சி எதிர்பார்ப்புக்கு மேல் வெற்றிகரமாக அமையச் செய்தன..
காலை 10 மணிமுதல் மாலை 4.00 மணிவரை நடந்த இந்த நிகழ்வில் நடுவர்களாக பொறுப்பேற்று, அனைத்து மாணவர்களின் உரைகளையும் பொறுமையாக கேட்டு மதிப்பீடு செய்த திருவாளர்கள் பேரா. சையத் இப்ராகிம், Abdul Hameed, Sithik Basha Julfy, Jalal ஆகியோருக்கு எமது விசேட நன்றி..
நிகழ்ச்சியின் அழைப்பை ஏற்று, ஒத்துழைப்பு நல்கியதுடன் மாணவர்களை குறுகிய காலத்தில் தயார் செய்து அனுப்பிய பள்ளி நிர்வாகங்களுக்கும், ஆசிரியர்களுக்கும் அஞ்சுமனின் நன்றி..
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.