மானுடத்தைப் போற்றிப் பாடிய பாவலர் கவிஞர் இன்குலாப் நினைவை போற்றிட இன்று 18/12/2016 அஞ்சுமன் காஜி ஜைனுலாபிதீன் நினைவரங்கில் நடைபெறாது. புதுவை தாகூர் கலை கல்லூரி தமிழ் துறை தலைவர் முனைவர் நா இளங்கோ அவர்கள் “இன்குலாப் ஒரு புல்லையும் நேசித்தவர்” என்ற தலைப்பில் உரையாற்றினார். புதுவை பல்கலைகழகம் மாணவர் பேரவை துணை தலைவி செல்வி தமிழ் கலையரசி அவர்கள் “இன்குலாப் நம் காலத்தின் எதிர்க்குரல்” என்ற தலைப்பில் உரையாற்றினார். மேலும் தோழர் அனஸ் சுல்தானா மற்றும் அஞ்சுமன் செயலாளர் லியாகத் அலி ஆகியோர் இன்குலாப் குறித்து உரையாற்றினார். நிகழ்ச்சியில் கவிஞர் இன்குலாப் குறித்து ஆவணப்படம் ஒளிபரப்பப்பட்டது.
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.