புதுவை குழந்தைகள் கலை இலக்கிய வளர்ச்சிக் கழகத்தின் சார்பாக கோட்டக்குப்பம் அஞ்சுமன் நடத்திய பல்நோக்கு செயல்பாடுகளை அங்கீகரித்து, ‘தாருல் அர்கம்’ விருது இன்று 17.12.2016 சனிக்கிழமை மாலை 4.30 மணி புதுவை கம்பன் கலை அரங்கத்தில் நடைபெற்றது. நீதியரசர் அர.மகாதேவன் தாருல் அர்கம் விருதினை அஞ்சுமனுக்கு வழங்க துணைத்தலைவர் அப்துல் குத்தூஸ் பெற்றுக் கொள்கிறார்.. உடன் புதுவை பல்கலையின் துணைவேந்தர் முனைவர் அனீஸா பஷீர்கான். விருதினை அஞ்சுமன் சார்பாக அப்துல் குத்தூஸ் பெற்று கொண்டார். அஞ்சுமன் செயலாளர் லியாகத் அலி உடன் இருந்தார்.