வர்தா புயல் காரணமாக கோட்டக்குப்பம் மற்றும் புதுவையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள வர்தா புயல் நாளை காலை, சென்னை மற்றும் ஆந்திரா இடையே கரையைக் கடக்க உள்ளது என வானிலை ஆராய்ச்சி நிலையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் புதுச்சேரி கடலில் அலையின் வேகம் அதிகமாகவும்,உயரமாகவும் உள்ளது. கடல் சீற்றமாக காணப்படுகிறது. இதனையடுத்து கடலோரத்தில் வாழும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதனிடையே வானிலை மைய அறிவுறுத்தலைத் தொடர்ந்து புதுச்சேரி துறைமுகத்தில் அபாய எச்சரிக்கையாக 8ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் காற்று 60கி.மீ வேகத்துடன் வீசும் என்றும் மின்சாரம் தடைபட வாய்ப்புள்ளது. மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.