தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். தங்கள் தலைவி பூரண நலத்துடன் மீண்டு வந்து, இரட்டை விரல் உயர்த்தி, கைகளை ஆட்டிப் புன்னகையுடன் தரிசனம் தருவார் என்ற நம்பிக்கையுடன் அ.தி.மு.க. நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை, பரிதவிப்போடும் பதற்றத்தோடும் மருத்துவமனை வாசலில் காத்துக் கிடக்கிறார்கள்.
நோயுடன் போராடுவது ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஓர் அத்தியாயம். ஆனால், கலைத்துறையில் மட்டுமின்றி அரசியல் அரங்கிலும் வெற்றிகரமான ஒரு தலைவியாக தன்னை நிலைநிறுத்திக் கொள்ள ஜெயலலிதா அனுதினம் எதிர்கொண்ட போராட்டங்கள்… அதைக் காட்டிலும் வலியும் வேதனையும் மிகுந்தவை. வெற்றிகரமான சினிமா நடிகையாக, மக்கள் ஆதரவு பெற்ற அரசியல் தலைவராக, மதியூகம் நிறைந்த கட்சித் தலைவராக, தமிழகத்தின் கம்பீர முதல்வராக, இந்திய அரசியல் அரங்கில் மதிப்பான ஆளுமையாக என ஒவ்வொரு காலகட்டத்திலும் தன்னைத் தகவமைத்துக் கொண்டே வந்திருக்கிறார் ஜெயலலிதா.
அவர் பூரண உடல்நலம் பெற்று முன்னைவிட உற்சாகத்தோடும் முழு ஆரோக்கியத்தோடும் செயல்பட வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம். நல் உள்ளங்களின் வேண்டுதல்கள் பலனளிக்கும் என்பது நன்நம்பிக்கை.
அந்த நம்பிக்கையுடன், முதல்வர் ஜெயலலிதா விரைவில் பூரண நலம் பெற வேண்டும் என்று பிரார்த்திப்போம். தங்களின் வாழ்த்துகள் மற்றும் பிரார்த்தனைகளை இங்கு பதிவு செய்யலாம். அந்த பிரார்த்தனைகள் நிச்சயம் நம் முதல்வரை பலம் பெறச் செய்யும்!
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.