வெள்ள காடான பர்கத் நகர் : மக்கள் தவிப்பு (ஒரு வருடம் முன்பு – ஒரு மீள் பதிவு )
ஒரு வருடம் முன்பு தண்ணீரில் மிதந்த பரக்கத் நகர் – மக்களுக்கும் ஆட்சியாளருக்கு ஒரு நினைவூட்டல்
கோட்டக்குப்பத்தில் நேற்று பெய்த கனமழையால், பர்கத் நகர் வெள்ளக்காடானது. வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால், கோட்டக்குப்பத்தில் மூன்று நாட்களாக மழை பெய்கிறது. நேற்று முன்தினம் இரவு முதல் தொடர்ந்து கனமழை கொட்டி வருகிறது. நேற்று காலை, 8:30 மணி வரையில் 16 செ.மீ., மழையும், மாலை, 4:00 மணி நிலவரப்படி 4 செ.மீ., என, மொத்தம், 20 செ.மீ., அளவிற்கு ஒரே நாளில் மழை கொட்டி தீர்த்தது. இது, கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச மழையாகும். கனமழையால் நகர வீதிகள் வெள்ளக்காடாகி, தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால், முக்கிய வீதிகள் தண்ணீரில் முழுகியது. பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியவில்லை.
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.