பொது சிவில் சட்டம் குறித்து அனைத்து முஸ்லிம் இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு ஆலோசனைக் கூட்டம்
நேற்று 14/10/2016 இரவு நடைபெற்ற தமிழ்நாடு அனைத்து முஸ்லிம் இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்.
1 பொது சிவில் சட்டம் குறித்து அனைத்திந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் நிலைப்பாட்டை ஆதரிப்பது.
2 முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் கேட்டுக் கொண்டுள்ளபடி அவர்கள் வெளியிட்டுள்ள படிவத்தில் கையழுத்து இயக்கத்தை கூட்டமைப்பில் உள்ள அனைத்து இயக்கங்களும் நடத்துவது. இதற்கான படிவ மாதிரி அனுப்பி வைக்கப்படும். சென்னையில் பெண்கள் பங்குக் கொண்டு படிவத்தில் கையொழுத்திடும் நிகழ்ச்சியை பத்திரிகையாளர்களை அழைத்து வரும் ஞாயிறு 23ம் தேதி நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.
3 சட்ட ஆணையம் Law Commission பொது சிவில் சட்டம் குறித்து வெளியிட்டுள்ள கேள்வி பட்டியலுக்கு யாரும் பதிலளிக்காமல் புறக்கணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
4 இன்று 15/10/2016 மாலை 4 மணிக்கு சென்னையில் செய்தியாளர் கூட்டம் நடத்துவது.
5 தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களையும் பிற மத தலைவர்களையும் சந்தித்து பொது சிவில் சட்டம் குறித்த நமது நிலைப்பாட்டிற்கு ஆதரவு திரட்டுவது என்றும் இதற்காக ம ம க தலைவர் ஜவாஹிருல்லா தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது.
6 அடுத்த கட்டமாக பொது சிவில் சட்டம் கொண்டு வர மத்திய அரசு எடுக்கும் முயற்சியை கண்டித்து பெரும் போராட்டம் நடத்துவது. இதற்கான தேதி பிறகு அறிவிக்கப்படும்.
7 தலாக் தொடர்பாக பத்ரு சையீத் தொடுத்துள்ள வழக்கில் சமுதாய இயக்கங்களும் தங்களை பிரதிவாதிகளாக இணைத்துக் கொள்ள வேண்டும்.
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.