பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்த புதுச்சேரி கடந்த 1954-ம் ஆண்டு நவம்பர் 1-ந் தேதி சுதந்திரம் அடைந்தது.
இருப்பினும் புதுச்சேரி பிராந்தியங்கள் கடந்த 1962-ம் ஆண்டு வரை இந்தியாவுடன் சட்டப்பூர்வமாக இணைக்கப்படாமல் தனி நாடு போல செயல்பட்டது. பிரெஞ்சு பாராளுமன்றத்தில் கடந்த 1962-ம் ஆண்டு ஆகஸ்டு 16-ந் தேதி புதுச்சேரி இந்தியாவுடன் இணைவதற்கான சட்டப் பூர்வ ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது.
இந்த நாள் இந்தியாவுடன் இணைந்த நாளாக புதுவை அரசால் கொண்டாடப்படுகிறது.
இதனையொட்டி புதுவையில் இன்று (செவ்வாய்க்கிழமை) பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக ஆகஸ்டு 16-ந் தேதி வேறு எந்த நிகழ்ச்சிகளும் நடைபெறாது.
ஆனால், புதிதாக பொறுப்பேற்றுள்ள காங்கிரஸ் அரசு சார்பில் கீழூரில் உள்ள நினைவு மண்டபத்தில் சட்டப்பூர்வ பரிமாற்ற நாள் இன்று கொண்டாடப்பட்டது.
விழாவில் புதுவை கவர்னர் கிரண்பேடி, முதல்- அமைச்சர் நாராயணசாமி, சபாநாயகர் வைத்திலிங்கம், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் ஆகியோர் பங்கேற்று மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து கவர்னர் கிரண்பேடியும், முதல்-அமைச்சர் நாராயணசாமியும் கீழூர் வாக்கெடுப்பில் பங்கேற்ற சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகத்தை போற்றி சிறப்புரையாற்றினர். விழாவில் தியாகிகள் கவுரவிக்கப்பட்டனர்.
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.