கோட்டக்குப்பம் அஞ்சுமன் நுஸ்ரத்துல் இஸ்லாம் நூலகம் சார்பாக இந்தியா சுதந்திர தின 70 வது ஆண்டு விழா இன்று 15/08/2016 தைக்கால் திடலில் நடைபெற்றது. புதுவை தாகூர் கலை கல்லுரியின் தமிழ் துறை தலைவர் பேரா.முனைவர் நூ. இளங்கோ அவர்கள் நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்று தலைமையுரை ஆற்றினார்கள். மேலும் முன்னிலை வகித்த டாக்டர் L .M ஷெரீப், காஜி உபைத்தூர் ரஹ்மான், இறைமறை வழங்கிய மௌலவி அ. பக்ருதீன் பாரூக், வரவேற்புரை நிகழ்த்திய மௌலவி மு.முஹம்மத் பாதுஷா, வாழ்த்துரை வழங்கிய நிஸார் அஹ்மத்,, கருத்துரை வழங்கிய சி பி ஐ புதுவை மாநில செயலாளர் தோழர் சோ. பாலசுப்ரமணியம், மற்றும் அஞ்சுமன் செயலாளர் லியாகத் அலி ஆகியோர் நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
விடுதலை சிறுத்தை கட்சியின் துணை பொது செயலாளர் சகோ ஆளூர் ஷாநவாஸ் அவர்கள் நிகழ்ச்சி பேருரை சிறப்பாக நிகழ்த்தினார்கள். விழாவில் நமதூர் மக்கள் ஜமாத்தார்கள் கலந்து கொண்டனர். இ. ரஹ்மத்துல்லாஹ் நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.