70-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு கோட்டக்குப்பம் அஞ்சுமன் நுஸ்ரத்துள் இஸ்லாம் பொது நூலகம் சார்பில் இன்று தேசிய கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் பொதுமக்கள் மற்றும் அரபி கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர். விழா நினைவாக மரக்கன்றுகள் நடப்பட்டது. மேலும் 70-வது சுதந்திர தின கொடியேற்றும் விழா கோட்டக்குப்பம் அல் ஜாமியாதூர் ரப்பானிய அரபி கல்லூரி வளாகத்திலும் நடைபெற்றது. இன்று மாலை தைக்கால் திடலில் சுதந்திர போரில் இந்து முஸ்லீம் ஒற்றுமை தலைப்பில் சிறப்புரை நடைபெற இருக்கிறது. பொதுமக்கள் அதிகளவில் கலந்து கொண்டு சிறப்பிக்கவும்.