லைலத்துல் கத்ர் இரவில் கோட்டக்குப்பம் பாரம்பரியமான முறையில் அனைத்து பள்ளிவாசல்களும் விளக்குகளால் அலங்கரிக்க பட்டு காட்சி அளிக்கிறது. மேலும் அனைத்து தெருக்களும் அலங்கார வளைவுகள் மற்றும் வண்ண விளக்குகளால் ஊர் முழுவதும் அழகாக உள்ளது.
பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் காவல் துறையினர் பாதுகாப்பில் உள்ளனர். லைலத்துல் கத்ர் இரவில் முளைக்கும் கடைகளில் நமதூரின் சிறப்பு இனிப்பு பண்டங்களான ஹாஜா, கஜீரா, காஜா , ஹல்வாவை பொதுமக்கள் ஆர்வமாக வாங்கி செல்கின்றனர்.
கோட்டக்குப்பம் சுற்றி உள்ள அனைத்து ஊர் இஸ்லாமிய மக்களும் நமதூருக்கு வருகை தந்து ஊரின் அழகை ரசித்து இனிப்பு பண்டங்களை வாங்கி ருசித்து செல்கிறார்கள்.
ஜாமியா மஸ்ஜிதில் லைலத்துல் கத்ர் இரவின் சிறப்பை விளக்கும் பயன்கள் நடைபெறுகிறது. சிறப்பு தொழுகையும் நடைபெறுகிறது .
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.