பெண்கள் ஜாக்கிரதை – ஜக்காத் வாங்கும் பெயரில் திரியும் திருட்டு கும்பல்
நோன்பு நேரத்தில் நமதூரில் வெளியூர் மக்கள் விடு வீடாக சென்று ஜக்காத் வாங்குவது அதிகரித்து வருகிறது, சமீப காலமாக இவர்களுடன் திருட்டு கூட்டமும் கலந்து கொண்டு முஸ்லிம்கள் போல் தோற்றத்தில் வேடம் அணிந்து ஆண்கள் தாடிகளுடன் பெண்கள் புர்கா போட்டு கொண்டு திரிகின்றார்கள்.
நோன்பு வைத்து அசதியில் தூங்கும் பெண்கள் மற்றும் வயதானவர்கள் இருக்கும் வீட்டில் அழைப்பு மணி அடித்து தங்களுக்கு பழைய துணிமணி ஏதாவது இருந்தால் கொடுத்து உதவ சொல்லி கேட்கும் இவர்கள், நமது பெண்கள் துணி எடுக்க அறைக்கு சென்று அலமாரியில் துணியை தேடும் நேரத்தில், இந்த திருட்டு கும்பல் பெண்களுக்கு வீட்டுக்கு உள்ளே வந்து விடுகிறார்கள், அதே நேரத்தில் வீட்டில் யார் யார் இருக்கிறார்கள் என்று நோட்டம் விட்டு, யாரும் இல்லை என்றால் உடனே கத்தியை காட்டி நகை பணத்தை பறித்து செல்கிறார்கள். இவர்களுக்கு துணையாக ஆண்கள் அடங்கிய ஒரு கும்பல் வெளியே காத்து இருக்கும்.
சமீபத்தில் இதே போல் ஒரு சம்பவம் புதுவை லாஸ்பேட் பகுதியில் நடந்து உள்ளது. வீட்டில் பழைய துணி எடுக்கும் நேரத்தில் அருகே விளையாடிய குழந்தையின் மோதிரம் மற்றும் கழுத்தில் இருந்த செயினை அறுத்து எடுத்து சென்று உள்ளனர்.
இந்த திருட்டு கும்பலிடம் பாதுகாப்பாய் இருக்க வீட்டில் வெளி கதவை திறந்து வைத்து இருக்காமல், பூட்டியே வைத்து இருக்கவும். ஜக்காத் மற்றும் பழைய துணி கேட்பவர்களுக்கு ஜன்னல் அல்லது கதவுக்கு வெளியே கொடுத்து அனுப்பவும். கொடுக்கும் போது முடிந்தால் ஆண்களை துணைக்கு வைத்து கொள்ளுங்கள்.
இது போல் சில திருட்டு கும்பலால் உண்மையில் வறுமையில் வாடும் ஏழை மக்கள் ஜக்காத் கேட்டு வந்தாலும் அவர்களையும் சந்தேகத்தோடு பார்க்கும் அவல நிலையை மாற்ற நமது ஜமாஅத் நிர்வாகத்தின் அனுமதி கடிதம் கொண்டு வருபவர்களுக்கு மட்டுமே ஜக்காத் மற்றும் பழைய துணி கொடுக்கும் முறை வந்தால், பெண்கள் நிம்மதியாக இருப்பார்கள். இந்த முறையை வரும் காலத்தில் நமது நிர்வாகம் பரிசீலிக்கவேண்டும்.
திருட்டு கும்பல் மேல் சந்தேகம் ஏற்பட்டால் உடனே பெண்கள் கூச்சல் போட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் அனைவரும் ஒன்று கூடி இவர்களை பிடித்து விசாரித்தால் அடுத்த முறை இந்த திருட்டு கும்பல் நமதூருக்கு வருவது குறையும்.
காலத்தின் கட்டாயமான இந்த செய்தியை வெளி நாட்டில் இருக்கும் நண்பர்கள் தங்கள் வீடுகளுக்கு நண்பர்களுக்கும் தகவல் சொல்லி பாதுகாப்பை இருக்க துணை செய்யவும்.
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.