பிரான்சில் தமிழக நோன்பு கஞ்சியுடன் இப்தார்


img_7110

பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் அருகே உள்ள வில்லேர்ஸ் சூர் மார்ன்  (Villiers-sur-Marne) நகரில் தமிழக மற்றும் புதுவை காரைக்கால்லை சேர்ந்த ஏராளமான தமிழ் முஸ்லிம் குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு,  இளைஞர்கள் ஒருவருக்கொருவர் சந்தித்துக்கொள்ள, கருத்து பரிமாறிக் கொள்ள ஒரு அமைப்பு வேண்டும் என்ற நோக்கில் அனைவரும் ஆலோசனை செய்து முறையாக தமிழ் முஸ்லிம் சங்கத்தை நிறுவினார்கள். யூனியன் இஸ்லாமிக் தே பிரான்செஸ் தி அஸி (Union Islamique Des Français De L’Asie) என்ற பெயரில் ஒரு சங்கத்தை அமைத்து அரசாங்க விதிமுறைப்படி சங்கத்தை பதிவு செய்தனர்.

சங்கத்தின் உறுப்பினரகளால் புதிய பள்ளிவாசல் கட்டப்பட வேண்டுமென்ற கோரிக்கை ஏற்கப்பட்டு தமிழ் முஸ்லிம் சங்கத்தின் உறுப்பினர்களிடம் நிதியுதவி பெறப்பட்டு மஸ்ஜித் அல் இஹ்சான் (Mosquee Al-Ihsan)  என்ற பெயரில் புதிய பள்ளிவாசல் கட்டி முடிக்கப்பட்டு வக்பு செய்யப்பட்டது.

பள்ளிவாசலில் தொழுகையில் தமிழில் சொற்பொழிவு நடைபெற்று வருவதோடு, மாணவர்களுக்கு திருக்குரான் மற்றும் இஸ்லாமிய வாழ்க்கை முறை குறித்து பாடம் நடத்தபடுகிறது. பிரான்சில் பிறந்து வளரும் தமிழ்முஸ்லிம் குழந்தைகளுக்கு தங்கள் தாய் மொழி தமிழில் ஏழுத படிக்க வகுப்புக்கள் நடைபெறுவது இந்த பள்ளியின் சிறப்பு.

ரமலான் மாத்தில் நோன்பாளிகள் நோன்பு திறப்பதற்கு தமிழக சுவையுடன் நோன்புக் கஞ்சி தினமும் சுமார் 300 க்கும் மேற்பட்டோருக்கு வழங்கப்பட்டு வருகிறது. நோன்புக் கஞ்சியுடன் பேரிச்சம்பழம், தண்ணீர்,ஜூஸ், சமோசா, ரோல்,பப்ஸ், பழ வகைகள், ரோஸ் மில்க், உள்ளிட்டவையும் வழங்கப்படுகிறது. தமிழக சுவையுடன் கூடிய நோன்புக் கஞ்சி ஏதோ தமிழகத்தில் இருப்பது போன்றதொரு உணர்வினை அனைவருக்கும் ஏற்படுத்தும்.

இனம், மொழி என்ற பேதமின்றி பிரான்ஸ், இந்தியர் , இலங்கையர், பாகிஸ்தானியர், அரபு நாட்டவர், பங்களாதேசைச் சேர்ந்தவர், ஆப்பிரிக்க நாட்டவர் என உலக நாட்டவர் அனைவரும் தமிழாக நோன்பு கஞ்சி குடித்து நோன்பு திறப்பது உலக ஒற்றுமையினைப் பறைசாற்றும் நிகழ்வாக காணபடுகிறது.

இந்த நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை தங்கள் வீட்டு விஷேசத்தை செய்வதைப்போல் ஈடுபாட்டோடு செய்து வருகின்றனர்.

பள்ளிவாசல் முகவரி :

Union Islamique Des Français De L’Asie – Mosquee Al-Ihsan

8 Boulevard de Friedberg, 94350 Villiers-sur-Marne. France

 

 

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s