அஞ்சுமன் 90ஆம் ஆண்டு நூலகப் பெருவிழாவில் முஸ்லிம் லீக்கின் மாநிலப் பொருளாளர் ஹாஜி ஷாஜஹான் அவர்கள் சிறப்பு மலர் ‘நூற்கண்டு’ வெளியிட வக்ப் வாரிய உறுப்பினர் ஹாஜி சிக்கந்தர் அவர்களும், பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்ற தலைவர் ஹாஜி டாக்டர் முஹம்மது யூனுஸ் ஆகிய இருவரும் பெற்றுக்கொண்டனர்..
உடன் முஸ்லீம் லீக் கொள்கை பரப்புச் செயலாளர் காயல் மகபூப், அஞ்சுமன் தலைவர் டாக்டர் எல்.எம்.ஷரீப், மூத்த உறுப்பினர் டாக்டர் இக்பால் பாஷா, புதுவைப் பல்கலை நூலகர் முனைவர் சம்யுக்தா, ஹாஜி எஸ்.எம். ஹிதாயத்துல்லா, மேனாள் ஆய்வு விஞ்ஞானி டாக்டர் சையத் சாதுல்லாஹ், அவைத் தலைவர் பேரா. மு. சாயபு மரைக்காயர், பேரா. தி.மு.அப்துல் காதர் ஆகியோர்..
அஞ்சுமன் 90ஆம் ஆண்டு நூலகப் பெருவிழாவின் சிறப்பு வெளியீடு நூலகம் கடந்து வந்தப் பாதையையும் கோட்டக்குப்பத்தின் வரலாற்றையும் சித்தரிக்கும் அறிஞர் பெருமக்களின் அரிய கட்டுரைகளுடன் 28.05.16 அன்று வெளியிடப்பட்டது.. “நூற்கண்டு” எனும் இச்சிறப்பு மலர் விற்பனையின் மூலம் ஈட்டப்படும் தொகை நூலக வளர்ச்சிக்கு பயன்படுத்தப் பட உள்ளது.
அஞ்சுமன் நூலகம் குறித்த வரலாறு மற்றும் தலைவர்களின் வாழ்த்து செய்திகளுடன் ஆவன படம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வரலாற்று பொக்கிஷம் dvd மற்றும் புத்தகம் வடிவில் விற்பனைக்கு உள்ளது. புத்தகம் நாளை மட்டும் சிறப்பு விலையாக ரூபாய் 200 மட்டுமே. ஆவணப் படம் DVD விலை ரூபாய் 80 மட்டுமே ..பொதுமக்கள் வாங்கி பயன் பெறுங்கள் …..