கோட்டக்குப்பம் பகுதி முழுவதும் அடிப்படை வசதிகள் நிறைவேற்றித்தரப்படும் வானுார் தொகுதியில் போட்டியிடும் வி.சி. வேட்பாளர் ரவிக்குமார்
இஸ்லாமிய மக்கள் வசிக்கும் கோட்டக்குப்பம் பகுதி முழுவதும் அடிப்படை வசதிகள் நிறைவேற்றித்தரப்படும். விருது நகர் மாவட்டம் கல்வியில் முதன்மை மாநிலமாக திகழ்கிறது. அதே போன்று, வானுார் பகுதியையும், கல்வியில் முதன்மை தொகுதியாக கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்.வானுார் தொகுதியில் போட்டியிடும் வி.சி. வேட்பாளர் ரவிக்குமார் கூறினார்.
இது குறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு:வானுார் தொகுதியில், புகழ்பெற்ற திருவக்கரை வக்கரகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இது மட்டுமின்றி, பஞ்சவடீ ஆஞ்சயநேயர் கோவில், குன்னம் கிராமத்தில் கிரைனட் தொழிற்சாலைகள் நிறைந்த பகுதிகள் உள்ளது. கோட்டக்குப்பம் பகுதியில் மீனவ கிராமப்பகுதிகள், இஸ்லாமிய மக்கள் வசிக்கும் பகுதிகள் அமைந்துள்ளன. முக்கிய பகுதிகள் அமைந்துள்ள வானுார் தொகுதியில் இதுவரை அடிப்படை வசதிகள் என்பது கிடையாது.
ஏற்கனவே இருந்த எம்.எல்.ஏ.,க்கள் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. உள்கட்டமைப்பு வசதிகள் என்பது காலம் காலமாக இந்த தொகுதியில் கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது.
குறிப்பாக விழுப்புரம் மாவட்டம் கல்வியில் பின்தங்கிய மாவட்டமாக உள்ளது. அதில் இடம் பெற்றுள்ள வானுார் தொகுதியில் அரசு கல்லுாரி என்பது கிடையாது. அதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. வானுார் பகுதி கல்வியில் பின்தங்கிய பகுதியாக உள்ளது.
விழுப்புரம்-புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலை ஒரு முக்கிய சாலையாக திகழ்கிறது. இந்த சாலையில் கண்டமங்கலம் சந்திப்பில் ரயில்வே கேட் அமைந்துள்ளது.
இங்கு, இதுவரை ரயில்வே மேம்பாலம் கட்டுவதற்கு, ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஒவ்வொரு நாளும், போக்குவரத்து நெரிசலில் மக்கள் சிக்கி தவியாய் தவித்து வருகின்றனர். கடலோர பகுதிகளில் சுனாமி ஏற்பட்டு, பத்தாண்டுகள் ஆகிறது. ஆனால், இன்னும் இயல்பு நிலை என்பது மாறவில்லை. கோட்டக்குப்பம், தந்திராயன்குப்பம், முதலியார்சாவடி போன்ற பகுதிகளில் கடல் அரிப்பு ஏற்பட்டு, மீனவ கிராமங்களே அழிந்து வருகிறது. அவர்களுக்கான தேவைகள் இதுவரை பூர்த்தி செய்யப்பட வில்லை. கடலோரப்பகுதியில் துாண்டில் முள்வலைவு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வில்லை.
இதுவரை இருந்த எம்.எல்.ஏ.,க்கள் என்ன செய்தார்கள் என்பதை, நான் குறை கூற விரும்ப வில்லை. நான் வெற்றி பெற்றால், வானுார் தொகுதி மக்களுக்கு அனைத்து விதமான திட்டங்களையும் கொண்டு வருவேன். குறிப்பாக கல்வியை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பேன்.
கண்டமங்கலத்தில் அரசு கல்லுாரி கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். கண்டமங்கலத்தில் ரயில்வே மேம்பாலம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். கிரானைட் கற்கள் சர்வதேச அளவில் மார்க்கெட் செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
வானுார் தொகுதி முழுவதும், உள்கட்டமைப்பு வசதிகள் மோசமாக உள்ளது. சாலை, குடிநீர், தெரு விளக்குகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தும் நிறைவேற்றித்தரப்படும்.
இஸ்லாமிய மக்கள் வசிக்கும் கோட்டக்குப்பம் பகுதி முழுவதும் அடிப்படை வசதிகள் நிறைவேற்றித்தரப்படும். விருது நகர் மாவட்டம் கல்வியில் முதன்மை மாநிலமாக திகழ்கிறது. அதே போன்று, வானுார் பகுதியையும், கல்வியில் முதன்மை தொகுதியாக கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.