வானூர் தொகுதி வேட்பாளர் அறிமுகம் – ரவிக்குமார் (விடுதலை சிறுத்தைகள் கட்சி)


12963817_10153366440697062_846618499336336551_n

 

நாகை மாவட்டம், சீர்காழி வட்டத்திலுள்ள மாங்கணாம்பட்டு என்ற சிற்றூரில் பிறந்த ரவிக்குமார் எம்.ஏ., பி.எல்.,பட்டங்களைப் பெற்றவர். தற்போது தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் ‘ மன்னன் நந்தனின் மறைக்கப்பட்ட வரலாறு’ என்ற தலைப்பில் பி.எச்.டி ஆய்வை மேற்கொண்டிருக்கிறார்.

விமர்சனம், கவிதை , மொழிபெயர்ப்பு என முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களின் ஆசிரியர். சுமார் நாற்பது நூல்களைத் தொகுத்து வெளியிட்டிருக்கிறார்.தேர்ந்தெடுக்கப்பட்ட இவரது கட்டுரைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு Venomous Touch ( Samya, Kolaktta ,2009) என்ற தலைப்பில் நூலாக வெளியிடப்பட்டுள்ளன. ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டி பிரஸ் நிறுவனத்துக்காக தமிழ் தலித் எழுத்துகளின் ஆங்கில மொழிபெயர்ப்பைத் தொகுத்து வெளியிட்டிருக்கிறார். நிறப்பிரிகை, தலித்,போதி ஆகிய சிற்றிதழ்களைத் துவக்கி நடத்திய இவர் தற்போது’ மணற்கேணி’ என்னும் இருமாத ஆய்விதழை நடத்திவருகிறார்.

இந்தியன் எக்ஸ்பிரஸ், பயனீர்,செமினார்,ஹிமால் முதலான ஆங்கில இதழ்களிலும்; தினமணி, இந்தியா டுடே,ஜுனியர் விகடன்முதலான தமிழ் ஏடுகளிலும் முன்னூறுக்கும் மேற்பட்டக் கட்டுரைகளை எழுதிஇருக்கிறார்.பி.பி.சி.தமிழோசை வானொலியில் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக மாதாந்தரத் தமிழக மடலை வழங்கியவர்.சுமார் இருபது ஆண்டு காலம் மனித உரிமைகளுக்காகப் பாடுபட்டவர். மக்கள் சிவில் உரிமைக்கழகம் ( பி யு சி எல் ) அமைப்பின் தமிழ்நாடு மற்றும் புதுவை பகுதிகளுக்குத் தலைவராக இருந்தவர். தமிழ்நாட்டில் மரண தண்டனை ஒழிப்புக்கான பிரச்சாரம் இவரால்தான் 1998இல் முன்னெடுக்கப்பட்டது.

2006 – 2016 வரை தமிழக சட்டப் பேரவை உறுப்பினராகப் பணியாற்றியவர். அந்த காலக்கட்டத்தில் , நரிக்குறவர் நலவாரியம், புதிரை வண்ணார் நலவாரியம் , வீட்டுப் பணியாளர் நலவாரியம், நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரியம், ஓமியோபதி மருத்துவர்கள் நலவாரியம் , அரவாணிகள் நலவாரியம் என ஐந்து நலவாரியங்கள் உருவாக்கப்படுவதற்கும், குடிசைவீடுகளை மாற்றி இருபத்தொரு லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டுவதற்கான திட்டம் அறிவிக்கப்படுவதற்கும் , தமிழ்நாட்டில் இருக்கும் ஈழத் தமிழ் அகதிகளின் பணக்கொடை உள்ளிட்ட வசதிகள் மேம்படுவதற்கும் காரணமாக இருந்தவர். 2010 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் அறிஞர் அண்ணா விருதினைப் பெற்றவர். தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் ஆட்சி மன்றக் குழு உறுப்பினராகவும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் எண் பேராயக் குழு உறுப்பினராகவும் இருந்தவர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளராக இருக்கிறார்.

எழுதிய நூல்கள் – கட்டுரைத் தொகுப்புகள் : 

கண்காணிப்பின் அரசியல் (1995) விடியல் பதிப்பகம்[2]
கொதிப்பு உயர்ந்து வரும் (2001) காலச்சுவடு பதிப்பகம்
கடக்க முடியாத நிழல் (2003) காலச்சுவடு பதிப்பகம்
மால்கம் எக்ஸ் (2003) காலச்சுவடு பதிப்பகம், உயிர்மை மறுபதிப்பு (2010)
வன்முறை ஜனநாயகம் (2004) தலித் வெளியீடு
சொன்னால் முடியும் (2007) விகடன் பதிப்பகம்
இன்றும் நமதே (2007) விகடன் பதிப்பகம்
தமிழராய் உணரும் தருணம் (2009) ஈழ விடுதலைப் போராட்டம் குறித்த கட்டுரைகளிந்தொகுப்பு. ஆழி பதிப்பகம்
துயரத்தின்மேல் படியும் துயரம் (2010) ஆழி பதிப்பகம்
காணமுடியாக் கனவு (2010) ஆழி பதிப்பகம்
சூலகம் ( 2009) பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்த கட்டுரைகள் உயிர்மை பதிப்பகம்
கற்றனைத்தூறும் (2009) கல்வி தொடர்பான கட்டுரைகள் , உயிர்மை பதிப்பகம்
பிறவழிப் பயணம் (2010) உயிர்மை பதிப்பகம்
பாப் மார்லி – இசைப் போராளி (2010) பாப் மார்லியின் வாழ்க்கை வரலாறு , உயிர்மை பதிப்பகம்
அண்டை அயல் உலகம் (2010) அண்டை நாடுகள் குறித்த கட்டுரைகள், உயிர்மை பதிப்பகம்
கடல்கொள்ளும் தமிழ்நாடு (2010) சூழலியல் கட்டுரைகள் , மணற்கேணி பதிப்பகம்
காற்றின் பதியம் (2010) மணற்கேணி பதிப்பகம்
எல்.இளையபெருமாள்- வாழ்வும் பணியும் (2010) மணற்கேணி பதிப்பகம்
சொல்லும் செயல் – ரவிக்குமார் சட்டமன்றத்தில் ஆற்றிய உரைகள் (2010) மணற்கேணி பதிப்பகம்
கவிதை

அவிழும் சொற்கள் (2009) உயிர்மை பதிப்பகம்
மழைமரம் (2010) க்ரியா பதிப்பகம்

மொழிபெயர்ப்புகள்:-

உரையாடல் தொடர்கிறது (1995) ஃபூக்கோ, எட்வர்ட் செய்த்,அம்பர்த்தோ எக்கோ முதலான உலகச் சிந்தனையாளர்களின் நேர்காணல்களும் கட்டுரைகளும்[3]
எட்வர்ட் ஸெய்த், தமிழில் ரவிக்குமார், அதிகாரத்திடம் உண்மையைப் பேசுதல், மணற்கேணிப் பதிப்பகம், புதுச்சேரி, 2010[3]
கட்டிலில் கிடக்கும் மரணம் (2002) மஹாஸ்தாதேவி, இஸ்மத் சுக்தாய், இஸபெல் ஆலண்டே போன்ற பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகள்
வெளிச்சமும் தண்ணீர் மாதிரிதான் (2003) காபிரியேல் கார்சியா மார்க்யூஸ், இஸபெல் அலண்டெ மற்றும் சிலரது கதைகள்
பணிய மறுக்கும் பண்பாடு (2003) எட்வர்ட் செய்தின் எழுத்துகள்[3]
வரலாறு என்னும் கதை (2010) – எட்வர்டோ கலியானோவின் தேர்ந்தெடுக்கப்பட்ட பதிவுகள்
வலசைப் பறவை ( 2010) எஹுதா அமிக்கய், கவாஃபி,மாயா ஆஞ்சலூ முதலானோரின் கவிதைகள்.

தொகுப்பு நூல்கள் :-

தலித் இலக்கியம், அரசியல், பண்பாடு (1996)
தலித் என்கிற தனித்துவம் (1998)
அயோத்திதாஸ் பண்டிதர் சிந்தனைகள் – 4 தொகுதிகள் (1999)
ரெட்டைமலை சீனிவாசன் ஜீவித சருக்கம் – ( தன்வரலாறு) (1999)
மிகைநாடும் கலை (2003) சினிமா கட்டுரைகள்
சுவாமி சகஜாநந்தா- மேலவையிலும் பேரவையிலும் ஆற்றிய உரைகள் , மணற்கேணி பதிப்பகம்
எங்கள் காலத்தில்தான் ஊழி நிகழ்ந்தது (2009) ஈழ இனப்படுகொலை குறித்த கவிதைகள், மணற்கேணி பதிப்பகம்.

ஆங்கில நூல்கள் :-

We, the Condemned (1999) (Against Death Penalty)
Venomous Touch (2009) selected articles of Ravikumar, Samya, kolkatta
Waking is another dream (2010) Poems on Mullivaykal, Navayana Publishing
Tamil Dalit Writing (2010) An anthology of Tamil Dalit Literature , Oxford University Press[4]

இதழ்கள் வெளியீடு :-

நிறப்பிரிகை- நவீன அரசியல் விவாதக்களத்தை உருவாக்கிய நிறப்பிரிகை இதழை அ.மார்க்ஸ், பொ.வேல்சாமி ஆகியவர்களோடு இணைந்து நடத்தியவர்.அந்த இதழ் இவரது முகவரியிலிருந்துதான் இவரால் வெளியிடப்பட்டது.
தலித்- தலித் இலக்கியத்துக்கென தமிழில் வெளியிடப்பட்ட தலித்- இருமாத இதழின் ஆசிரியர். அது பதினொரு இதழ்கள் வெளியானபின் நின்றுபோனது.[2]
போதி – தலித் வரலாற்றுக்கென இவரால் உருவாக்கப்பட்ட காலாண்டிதழ். இரண்டு இதழ்கள் வெளியாகி நின்றுபோயிருந்தது. தற்போது மீண்டும் வெளியாகத் தொடங்கியுள்ளது.[2]
மணற்கேணி- இவரை ஆசிரியராகக்கொண்டு தமிழ்ச் செவ்வியல் இலக்கியம், தொல்லியல் முதலானவை குறித்த ஆழமான ஆய்வுகளைத் தாங்கி வெளிவரும் இருமாத இதழ்.
இண்டியன் எக்ஸ்பிரஸ், பயோனிர், செமினார், தி ஹிந்து, போன்ற ஆங்கில இதழ்களில் கட்டுரைகளையும், தினமணி, இந்தியாடுடே, ஜுனியர் விகடன் போன்ற இதழ்களில் பத்திகளையும் எழுதிவருகிறார். ஜூனியர் விகடன் இதழில் 400க்கும் அதிகமான கட்டுரைகளை எழுதியுள்ளார்.

பிபிசி (தமிழ்), தமிழ். காம் போன்றவற்றிற்குத் தொடர்ச்சியாகக் கட்டுரைகள் வழங்கியிருக்கிறார்.

ரவி குமார் அவர்களின் முக நூல் பக்கம், அனைவரிடமும் எளிதாக தொடர்பு ஏற்படுத்தி வருகிறார்.

Sans titre

 

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s