வானூர் சட்டமன்ற தேர்தல் விதிமுறைகள் குறித்து காவல்துறை சார்பில் அனைத்து கட்சியின் ஆலோசனை கூட்டம் திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் நடந்தது. கோட்டக்குப்பம் டி.எஸ்.பி.ஞானவேல் தலைமை தாங்கி தேர்தலில் அனைத்து அரசியல் கட்சியினர் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்து பேசினார். கூட்டத்தில் தாசில்தார் காமாசிங் முன்னிலை வகித்தார். தேர்தல் அறிவிக்கப்பட்டு நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் பொது இடங்களில் உள்ள சுவர் விளம்பரங்களை அவர்களாகவே முன்வந்து அழித்து விடவேண்டும்.
பேனர் வைத்திருந்தால் அதனை உடனடியாக அகற்ற வேண்டும். தனியார் சுவர்களில் இனி விளம்பரம் செய்தால் அவர்களின் அனுமதிபெற வேண்டும் என்றும் கூறினார். திமுக ஒன்றிய அவைத்தலைவர் குப்பன், கோட்டக்குப்பம் நகர செயலாளர் சண்முகம், தமிழ்மாநில காங்கிரஸ் வட்டார தலைவர் ராஜேந்திரன், பாமக ஒன்றிய செயலாளர்கள் பத்மநாபன், பாலு, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட துணை செயலாளர் இரணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கோட்டக்குப்பம் இன்ஸ்பெக்டர் அரிகரன், வானூர் இன்ஸ்பெக்டர் திருமணி, கிளியனூர் இன்ஸ்பெக்டர் பால்சுதர், மரக்காணம் இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.