அஞ்சுமன் 90ஆம் ஆண்டு விழாக் குழுக்களின் கூட்டுக் கூட்டம்
அஞ்சுமன் 90ஆம் ஆண்டு விழாக் குழுக்களின் கூட்டுக் கூட்டம் இன்று 21.2.16 அன்று காலை 10.30 மணியளவில் அஞ்சுமன் துணைத் தலைவர் ஹாஜி எம்.ஏ. ரஷீது தலைமையில் நடைபெற்றது. உறுப்பினர்களின் ஆலோசனைகளின் படி கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.1. விழாக்குழு, மலர்க்குழு, நிதி ஆலோசனைக்குழு, நிகழ்ச்சிக்குழு, வரவேற்புக்குழு ஆகிய 5 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டன. குழுவில் தலைவர், செயலர் நீங்கலாக பத்து உறுப்பினர் நியமிக்கப்பட்டனர். மேலும் செய்தி தொடர்பாளர் இருவரும், வெளிநாட்டு தொடர்பாளர் பத்து பேரும் முடிவு செய்து அறிவிக்கப்பட்டனர். அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படவும் தீர்மானிக்கப்பட்டது.
2. விழா சிறப்பு மலர் 250 பக்கங்களுக்கு மேல் கொண்டு வர தீர்மானிக்கப்பட்டது. மலருக்கான செலவு தொகையினை விளம்பரங்கள் மூலமாக திரட்டவும், மலர் விற்பனை தொகையின் மூலம் அஞ்சுமன் சென்ற ஆண்டு பற்றாக்குறையை ஈடு செய்யவும் முடிவு செய்யப்பட்டது. 3. இரு நாள் நிகழ்ச்சி நிரலும் அறிவிக்கப்பட்டு உறுதி செய்யப்பட்டது. 28.5.16 அன்று நான்கும், 29.5.16 அன்று மூன்றும் ஆக ஏழு அரங்குகளில் நிகழ்ச்சிகள் நடைபெறும். அவை
1. நூலக விழா
2. கல்வி எழுச்சி அரங்கு
3. வாழ்வியல் வழிகாட்டு அரங்கு
4. சுழலும் சொல்லரங்கம்
5. சமுதாய விழிப்புணர்வு அரங்கு
6. மார்க்க விழிப்புணர்வு அரங்கு
7. மகளிர் அரசியல் விழிப்புணர்வு அரங்கு
ஒவ்வொரு அரங்கிற்கான உத்தேச செலவு ரூ35000/- என நிர்ணயிக்கப்பட்டது. நிகழ்ச்சி கொடையாளர்கள் மேற்படி தொகை செலுத்தி தங்கள் குடும்பத்தார் அல்லது அமைப்பின் சார்பாக இந்த அரங்கினை அமைத்துக் கொள்ளலாம். அரங்கில் பெயர் பிரதானமாக இடம்பெறுவதுடன், கொடையாளர் நிகழ்வில் முன்னிலை பெறுவார். விழா அழைப்பிதழின் முன் பக்கத்தில் கொடையாளர் அல்லது அமைப்பின் பெயரை இடம்பெறச் செய்ய தீர்மானிக்கப் படுகிறது.
4. அஞ்சுமன் வெள்ளிவிழா (1951) தருணத்தில் சிறப்பு அழைப்பாளர்களுக்கு கோட்டக்குப்பம் நுழைவாயிலில் வரவேற்பு தந்த நிகழ்வை மீள்பதிவு செய்யும் வகையில் அதே போன்ற நிகழ்வை 90ஆண்டு பெருவிழாவில் செய்திட தீர்மானிக்கப்பட்டது. 5. விழாவின் இதர செலவீனங்களை உறுப்பினர் மற்றும் ஆதரவாளர் பங்களிப்பில் செய்து முடிக்க தீர்மானிக்கப் பட்டது.
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.