கோட்டக்குப்பம் ஈசிஆர் இணைப்பு சாலையோரம் கொட்டப்படும் இறைச்சி கழிவுகள்
நன்றி : தினகரன்
புதுவையில் இருந்து சென்னை செல்வதற்கும், சென்னையில் இருந்து புதுவை வருவதற்கும் முக்கிய சாலையாக இசிஆர் விளங்குகிறது. இந்த சாலை வழியாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றது. இந்நிலையில் கோட்டக்குப்பத்தில் இருந்து முத்தியால்பேட்டை வழியாக செல்லும் இசிஆர் சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து, கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கோட்டக்குப்பத்தில் இருந்து கருவடிக்குப்பம் வழியாக இசிஆர் இணைப்பு சாலை போடப்பட்டது. இதனால் போக்குவரத்து நெரிசல் குறைந்தது.
இந்நிலையில் இணைப்பு சாலையின் இருபுறங்களில் ஓட்டல் கழிவுகள், கோழி இறைச்சிகள், திருமண மண்டபங்களின் கழிவுகள் மர்ம நபர்கள் கொட்டிவிட்டு செல்கின்றனர். இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் சுற்றுச்சூழல் கெடுகிறது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள், அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மூச்சு திணறல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கோட்டக்குப்பம் பேரூராட்சிக்கு புகார் அளித்தனர்.
இதையடுத்து அப்பகுதியில் குப்பைகள் கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என்று பேரூராட்சி நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை பெயர் பலகை வைக்கப்பட்டது. அதன் பின்னரும் மர்ம நபர்கள் இறைச்சி உள்ளிட்ட கழிவுகளை கொட்டி வருகின்றனர். அவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் பேரூராட்சி நிர்வாகம் செயல்பட்டு வருகிறது. பேராட்சியின் இந்த செயல் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மத்தியல் கடும் அதிருப்திக்கு ஏற்படுத்தி உள்ளது.பொதுமக்கள் நலன் கருதி பேரூராட்சி நிர்வாகம் அப்பகுதியை கண்காணித்து, குப்பைகள் கொட்டும் மர்ம நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.