அஞ்சுமன் சார்பில் இன்றும் தாழங்காடு உட்பட்ட கிராமங்களில் வெள்ள நிவாரண உதவி
அஞ்சுமன் நுஸ்ரத்துல் இஸ்லாம் ஏற்பாட்டில் தமிழ்நாடு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தயாரிப்பாளர் சங்கத்தின் நிதியாதரவுடன் இ.சி.ஆர் சாலையில் மரக்காணத்தை அடுத்துள்ள தாழங்காடு, முட்டுக்காடு, பனையூர், எம்.எம்.நகர் ஆகிய கிராமங்களில் மழையால் பாதிக்கப்பட்ட சுமார் 500 குடும்பங்களுக்கு அரிசி, மளிகை, போர்வை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டன.. இத்துடன் வர்மா நிறுவனத்தின் சார்பில் நில வேம்பு கசாயம் அளிக்கப்பட்டது.. இப்பணியில் ஒருங்கிணைந்து ஒத்துழைத்த குடிநீர் தயாரிப்பாளர் சங்கத்தின் நிர்வாகிகள், அஞ்சுமன்- மிஸ்க் நிவாரண குழுவினர், அஸ்பிரேஷன் நண்பர்கள் ஆகிய அனைவரது பணியும் பாராட்டுக்குரியது.. அஞ்சுமன் செயலாளர் என்ற அடிப்படையில் நெஞ்சார்ந்த நன்றிகள்.. தொடர்ந்து மக்கள் பணியில் ஒன்றிணைவோம்.. நன்றினை செய்வோம்.. வாழ்த்துக்கள் – அ.லியாகத் அலி
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.